'கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் மரணம்...' 'மகனுக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தம்...' 'மகன் இறந்த கொஞ்ச நேரத்துலையே...' அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை மிரட்டியதாக கூறி கைது செய்யப்பட்ட தந்தையும் மகனும், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் அரசரடி தெருவில் மரக்கடை பனமரக்கடையும், தனியார் லாரி புக்கிங் ஏஜென்சி நடத்தி வருபவர் ஜெயராஜ்(58). இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், இவர்களுக்கு 3 மகள்களும், பென்னிக்ஸ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தன்னை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் பணி செய்ய விடாமல், கொலை மிரட்டல் விடுத்ததாக தலைமை காவலர் முருகன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ்ஸை(31) 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இருவரையும் போலீஸார் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அதையடுத்து நேற்று (21.06.2020) இரவு 7.45 மணிக்கு பென்னிக்ஸ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், இதையடுத்து கிளைச் சிறை வார்டன்கள், கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் பென்னிக்ஸை கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் உயர் சிகிச்சைக்காக பென்னிக்ஸை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தி உள்ளனர், ஆனால் அதற்குள் பென்னிக்ஸ் உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து பென்னிக்ஸின் தந்தை உடல்நலக் கோளாறால் நேற்று இரவு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இன்று 4.30 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

அடுத்தடுத்த தொடர் மரணங்களால் கொந்தளித்த சாத்தன்குள வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் இணைத்து நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது பிரேத பரிசோதனை முடிவில் தான் இருவரின் இறப்பு குறித்த உண்மை நிலவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.

மேலும் பென்னிக்ஸூக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரும் அவரின் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தாரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மரணங்கள்  குறித்து, கோவில்பட்டி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்