'வெறும் பத்தே நிமிஷம் தான்...' 'சொந்தக்காரங்க 4 பேர் வந்திருக்காங்க...' ஊரடங்கு உத்தரவால் நடந்த எளிய திருமணம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவால் விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் ஓன்று நடைபெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை தேவைகளை தவிர, இதர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிச்சயம் செய்யப்பட்ட, முரளிதரன்- மீனா தம்பதிக்கு இடையேயான திருமணம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களது திருமணம் இன்று திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஈஸ்வரன் கோயில் மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. அவர்களது திருமணத்திற்கு மொத்தமே பத்து நிமிடங்கள்தான் வழங்கப்பட்டது. மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தரப்பில் இருந்து சொந்தக்காரர்கள் 4 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மகள் வயது பெண்ணுடன் திருமணம்’.. ‘தந்தை மீது புகார் கொடுத்த மகள்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'மாஸ்க் அணிந்து... மணம் முடித்த தம்பதி!'... கொரோனாவை அலறவிட்ட திருமணம்!
- கொரோனாவால் ‘மணமகன்’ ஊர் திரும்பாததால்... குடும்பத்தினர் எடுத்த ‘முடிவு’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் ‘திருமணம்!’...
- ‘திருமணமான’ சில நாட்களில்... ‘புதுமாப்பிள்ளைக்கு’ பேஸ்புக்கில் வந்த ‘வீடியோ’... அதிர்ந்துபோனவருக்கு ‘அடுத்து’ மனைவியிடமிருந்து வந்த ‘மிரட்டல்’...
- 'என் ஹஸ்பண்ட் கூட தான் போவேன்...' 'என் பொண்ணு கைநிறைய சம்பாதிக்குறா, அதனால...' கொலைமிரட்டல் விடுப்பதாக இளம் ஜோடி புகார்...!
- கொண்டாட்டத்தின்போது ‘புதுமாப்பிள்ளை’ செய்த ஸ்டண்ட்டால்... திருமணமான ‘இரண்டே’ மாதங்களில் நேர்ந்த ‘துயரம்’... போலீசுக்கு சொல்லாமல் ‘குடும்பத்தினர்’ செய்த காரியம்...
- ‘அரச’ மரத்துக்கும், ‘வேம்பு’ மரத்துக்கும் கல்யாணம்...! ‘பத்திரிக்கை அடிச்சு, சீர்வரிசை பண்ணி, அடேங்கப்பா...’ மணமக்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து...!
- ‘கல்யாணமாகி 6 மாசம் ஆச்சு’.. ‘இப்போ வந்து இப்டி சொல்றீங்க’.. கணவன் சொன்ன பதிலால் ‘ஷாக்’ ஆன மனைவி..!
- ‘காதல் திருமணம் செய்த சில மணிநேரத்தில்’... ‘புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்’... ‘சேலம் அருகே நடந்த பரபரப்பு’!
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...