'50,000 கூலி தொழிலாளர்களுக்கு இலவச உணவு...' 'சமூக சமையலறை திறந்து...' சாதித்துக் காட்டிய பிரபல நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருக்கும் 50,000 கூலி தொழிலாளர்களுக்கு சமூக சமையலறை என்னும் பெயரில் மஹிந்திரா நிறுவனம் உணவு வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வீதத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதில் பெரும்பாலும் சொந்த ஊரில் இருந்து பொருளாதாரத் தேவைக்காக வெளிமாநிலங்களுக்கு சென்றவர்களும், கூலி தொழிலாளிகளும் பாதிப்படைந்த சூழலில் அவர்களின் தேவைக்காக அரசு பல நிவாரணங்களை அறிவித்துள்ளது. மேலும் தன்னார்வலர்களும், தனியார் நிறுவங்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதேபோல் இந்தியாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு சமூக சமையலறையை உருவாக்கி இதுவரை ஒரு வாரத்தில் 50,000 உணவு பொட்டலங்களை வழங்கி உள்ளதாக மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி., பவன் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 10 இடங்களில் திறக்கப்பட்டுள்ள இந்த சமூக சமையலறைகளில் ஒரு நாளைக்கு சுமார் 10,000 உணவுப் பொட்டலங்களை தயாரித்து தேவைப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். இதுமட்டுமில்லாமல் உணவு தேவைப்படுபவர்களுக்குச் சமையல் செய்வதற்கான சமூக சமையலறைக்கான உள்கட்டமைப்பை வழங்க உள்ளதாகவும் பவன் கோயங்கா அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மஹிந்திரா நிறுவனம்
வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் வென்டிலேட்டர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மும்பை உள்ள காண்டிவலி பகுதியில் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அவரது நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் முதல் 50,000 முகக்கவசங்களை மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்போவதாக கோயங்கா அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- WATCH VIDEO: ‘கலங்கடிக்கும் துன்பம்’... ‘முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு’... 'அட்சயப் பாத்திரமான இந்தியர்கள்'!
- ‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..!
- ‘கொரோனாவால்’ தயக்கமா?... ‘இனி’ கவலையில்லாம ‘ஆர்டர்’ பண்ணுங்க... ‘ஸ்விக்கி’ அறிமுகம் செய்துள்ள புதிய ‘வசதி’...
- உணவு ‘டெலிவரி’ செய்வதுபோல... நாள் கணக்கில் ‘நோட்டமிட்டு’ பிளான் போட்ட இளைஞர்கள்... 50 ‘சிசிடிவி’ கேமராக்களை ஆராய்ந்து... வளைத்துப் பிடித்த ‘சென்னை’ போலீசார்...
- VIDEO: 'வாங்க... வாங்க... ப்ரெட், ஃப்ரூட்ஸ் எல்லாம் இருக்கு... நல்லா சாப்பிடுங்க'... 'மான்களை வீட்டுக்குள் அழைத்து விருந்து வைத்த பெண்'... வினையாக மாறிய கருணை!
- 1500 ரூபாய் 'காஸ்ட்லி' பிரியாணி... 35,056 வகைகள்... 4.60 கோடி ... 'ஷாக்' கொடுத்த இந்தியர்கள்!
- 'யாரெல்லாம் இத பண்ணி இருக்கீங்க'...'சொமேட்டோ கேட்ட கேள்வி'...பிரித்து மேய்ந்த நமது 'புள்ளிங்கோ'!
- 'இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!'.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!
- 'பாலில் அதிக நச்சுத் தன்மை!' ..முதலிடமே உங்க மாநிலம்தான்!.. மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!
- 'ஸ்கூல் கேண்டின்களில்'... 'இதையெல்லாம் விற்கக் கூடாது'... 'மத்திய அரசு கொண்டுவரும் புதிய தடை'... விவரம் உள்ளே!