‘நாம ஒரு நல்லது பண்ணா, நமக்கு ஒரு நல்லது நடக்கும்’.. காசுக்கு ஆசைப்படாத சென்னை இளைஞர்..! குவியும் பாராட்டுக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏடிஎம் -ல் பணம் எடுக்கும் போது மற்றொருவர் வங்கி கணக்கில் இருந்து தவறுதலாக வந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (20-09-19) தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின்,தென் சென்னை மாவட்ட தலைவரான செந்தில் குமார் இரவு 10 மணி அளவில் ரிச்சி ஸ்ட்ரீட் அருகே உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் -ல் பணம் எடுக்க சென்றபோது, தனக்கு முன் வேறு ஒரு நபர் பணம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால் பணம் வராத காரணத்தால் அந்த நபர் ஏடிஎம் மையத்தை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது செந்தில் குமார் தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முயற்சித்த போது தான் கொடுத்ததைவிட அதிகமாக பணம் வந்துள்ளது .
இதனை அடுத்து இந்த பணம் தன்னுடையது அல்ல என்று அறிந்து, தனக்கு முன்னால் பணம் எடுக்க முயன்றவரை தேடிச் சென்று பணத்தை ஒப்படைக்க முயன்றுள்ளார்.ஆனால் அந்த நபர் கிடைக்காததால் ஏடிஎம் மையத்திற்கு அருகிலிருக்கும் கடைக்காரர் மற்றும் ரோந்து பணியில் இருந்த காவலரிடம் தனது தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (23-09-19) அன்று எஸ்பிஐ வங்கிக்கு சென்று அவரைப் பற்றி தகவல்கள் அறிய முயற்சித்துள்ளார். இதனை அடுத்து ஏடிஎம் துறை தலைமை அலுவலகம் சென்று அதிகாரிகள் உதவியுடன் அந்த நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வங்கிக்கு அழைத்துள்ளார். பின்னர் இரவு 8 மணி அளவில் பணத்தை உரியவரிடம் சேர்த்துள்ளார். பணத்தை இழந்தவரே எப்படி பணத்தை திரும்பப் பெறப் போகிறோமோ என்று எண்ணிக் கொண்டு இருந்த நிலையில் அவர் முயற்சிப்பதற்குமுன் தாமாகவே அவரை கண்டறிந்து பணத்தை கொண்டுவந்து கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- ‘திருமண மண்டபங்களில் குழந்தைகளை குறிவைத்து’... ‘நகைகளை திருடிச் செல்லும் நபர்'!
- 'மாநகரப் பேருந்து மோதியதில்'... 'ஒரேநாளில் 2 பெண்கள் பலி'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- ‘8-வது மாடியிலிருந்து தவறி விழுந்து’... ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’!
- வடபழனியில் 'பேருந்து' மோதி கீழே விழுந்த பெண்..சிகிச்சை பலனின்றி பலி!
- 'நம்ம பாண்டி பஜாரா இது'...'இனிமேல் கார்'ல போக முடியாது'...'இதெல்லாம் யாராவது கவனிச்சீங்களா'!
- '27 வழக்கு.. அதுல 8 கொலைவழக்கு '.. சென்னையில் சிக்கிய பிரபல தாதா.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு!
- ‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- 'அரசு வேலைக்கான ஆர்டர் வந்திருச்சு’... ‘நம்பிச் சென்ற இளம் தம்பதிக்கு’... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- 'சென்னையில் அரசுப் பேருந்து உரசியதால்'... ‘கடை உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்’!