'ஆணுறுப்பில் நுழைந்த அட்டைப்பூச்சி...' 'உள்ள போய் ரத்தத்தை உறிஞ்சு பெருசாயிடுச்சு...' குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குளத்தில் நீச்சல் ஆடையின்றி குளித்த முதியவரின் ஆணுறுப்பின் வழியே அட்டை பூச்சி நுழைந்த சம்பவம் மருத்துவர்களுக்கு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியாவின் புனோம் பென்னில் வசிக்கும் முதியவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டருகில் இருக்கும் குளத்தில் குளித்துள்ளார். அதையடுத்து அவரது ஆணுறுப்பில் வீக்கம் மற்றும் வலியில் அவதியுற்று வந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை சென்ற அவர், தன் குளத்தில் ஆடையின்றி குளித்ததாகவும் அதற்கு பிறகுதான் வலி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில்  அதிர்ச்சியான காட்சியை பார்த்துள்ளனர். முதியவரின் சிறுநீர்ப்பையில் சிறிய கேமரா கொண்டு நுழைத்து பார்க்கையில் அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது. குளத்தில் ஆடையின்றி குளித்த போது அவரின் ஆணுறுப்பு வழியே அட்டைப் பூச்சி சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் முதியவரின் உடலில் இருக்கும் ரத்தத்தை உறிஞ்சி அட்டைப்பூச்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளது.

முதியவரின் உடலில் இருந்து சுமார் 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகியதால் அட்டைப்பூச்சியை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிரமப்பட்டு அட்டைப்பூச்சியை வெளியேற்றிய மருத்துவர்கள், ஒரு நாள் முழுவதும் முதியவர் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதையடுத்து முதியவர் உடல்நலம் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் முதியவருக்கு மட்டுமில்லாமல் மருத்துவர்கள் குழுவிற்கும் ஆச்சர்யமாகவும் சவாலாகவும் இருந்துள்ளது. மேலும் மழைக்காலங்களிலோ அல்லது குளம் குட்டைகளில் குளிக்கும் போது முழு கவனத்துடனும் குறைந்தபட்ச உடையையேனும் அணிய வேண்டும் என்றும், அதன்பிறகு வலி இருந்தால் மருத்துவமனைகளை அணுகவேண்டும் என்றும் மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்