மனைவியின் முன்னாள் காதலனுக்கு ஸ்கெட்ச்.. பேக்கரிக்குள் வைத்து கணவன் சம்பவம்.. திண்டுக்கல் ஷாக்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல்: மனைவியின் முன்னாள் காதலனை நண்பர்களின் உதவியோடு பேக்கரியில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மலையப்பன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சாமிதுரை (34). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாவும் பிறகு அப்பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் நடத்ததாகவும் கூறப்படுகிறது. சாமிதுரையின் காதலியை மருது என்ற நபர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் சாமிதுரைக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாமிதுரைக்கும் மருது என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. ஒரே தெருவில் வசித்து வந்ததால் இந்த பிரச்னை அடிக்கடி நடந்து வந்துள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு மேலாகவே மலையப்பன்பட்டி கிராமப்பகுதியில் அடிக்கடி இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்ததாகவும் இரு தரப்புமே ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காவல் நிலையத்தில் மருது மற்றும் சாமிதுரை இடையேயான குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் இன்று காலை இரு தரப்பினரையும் வரவழைத்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மருது மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் இணைந்து சாமிதுரையை வத்தலக்குண்டு உசிலம்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் பேக்கரிக்கு அழைத்து போயுள்ளனர். அப்போது பேக்கரியின் உள்ளே அமர்ந்திருந்த சாமிதுரையை கண்ணிமைக்கும் நேரத்தில் மருது மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சாமிதுரை உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பியோட முயற்சித்து ரத்த வெள்ளத்தில் பேக்கரிக்கு வெளியிலேயே மயங்கி சாலையில் விழுந்தார்.
இதனையடுத்து வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறயினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடைய மருது அவருடைய நண்பர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், பட்டப்பகலில் துணிகரமாக பேக்கரியில் அமர்ந்திருந்த நபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வத்தலக்குண்டு நகர் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னது 72 வருசமா எங்கயுமே மாட்டலையா..! செம ‘ஷாக்’ கொடுத்த தாத்தா.. மிரண்டு போன போலீஸ்..!
- ‘என் புருஷன் குடிச்சு இறந்துட்டாரு’.. எல்லாரையும் நம்ப வைத்த மனைவி.. காதலன் சிக்கியதும் க்ளைமாக்ஸில் பரபரப்பு ட்விஸ்ட்..!
- ஒரே ஆண் நண்பரை காதலித்த இரண்டு பெண்கள்.. காதலன் எடுத்த விபரீத முடிவு
- மூன்றாவதும் பெண் குழந்தையா... கணவன் மனைவி சண்டை... விட்டு கொடுக்காத தாய் பாசம்!
- காதலனுடன் சென்று சொத்தில் பங்கு கேட்ட மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்.. அலறியடித்து ஓடிய காதலன்..!
- டவுட் வராம க்ளோஸ் பண்ணனும்னா 'சாம்பார்' தான் ஒரே வழி! கணவனை தீர்த்துக்கட்ட மனைவியின் மாஸ்டர் பிளான்.. அதிர வைக்கும் வாக்குமூலம்
- 3 பேருக்கும் ஒரே மாதிரி நெற்றியில் பொட்டு.. திரும்பி இருந்த ஃபோட்டோ.. இறந்து கிடந்த குடும்பம்.. அமான்ஷ்ய சடங்கு நடந்ததா?
- மனசுக்குள் இருந்த ரகசியம்.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனைவி.. கேட்ட உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தெறித்து ஓடிய கணவன்
- அதிகாலையில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. கதவைத் திறந்து பார்த்ததும்.. அரண்டு போன ஊர் மக்கள்
- கையில் பையுடன் வந்த பெண்.. பைக்குள்ள இருந்தத பார்த்து வெலவெலத்து போன போலீஸ்!.. பரபரப்பு சம்பவம்!!