வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்த மனைவி.. நடுராத்திரி கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்த மனைவியை அவரது கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைமறைவான கணவரை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரீல்ஸ்
சென்னை, அயனாவரம் என்எம்கே தெருவைச் சேர்ந்தவர் சாலமன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இவரது மனைவி பிரபல சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கி வருபவர் என சொல்லப்படுகிறது. மேலும், திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் சாலமனின் மனைவி. இதன்மூலம் பலர் அவரை இன்ஸ்டா மூலமாக பின்தொடர்ந்து வந்திருக்கின்றனர். இருப்பினும், இதில் சாலமனுக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது.
எச்சரிக்கை
இந்நிலையில், சமீபத்தில் வேறு ஒரு ஆணுடன் ரீல்ஸ் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த பெண். இதனை கண்ட சாலமன் கோபமடைந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் எச்சரிக்கையும் செய்திருக்கிறார். ஆனால், அவரது மனைவி தொடர்ந்து வேறு ஒரு நபருடன் இணைந்து ரீல்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று இரவு வீட்டுக்குட் திரும்பிய சாலமன், தனது மனைவிடம் இந்த ரீல்ஸ் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் ஆத்திர மிகுதியால் சாலமன் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அவரது மனைவி சத்தம் எழுப்பவே பதறியடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
வழக்கு பதிவு
காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த அயனாவரம் காவல் நிலைய அதிகாரிகள் சாலமன் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 5 வருசமா காதலிச்சிட்டு வந்த ஜோடி.. "கடைசியா காதலன் சொன்ன விஷயத்த கேட்டு உடைந்த இளம்பெண்.. துயரம்!!
- புருஷனுக்காக 3 வருஷமா ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த மனைவி.. போலீசில் சிக்கியதும் சொல்லிய விஷயம்.. கதிகலங்கிப்போன உறவினர்கள்..!
- சுனாமியில் காணாம போன மனைவி.. 11 வருசமா தேடும் கணவர்.. கடைசியா மனைவி அனுப்புன ஒரு மெசேஜ் தான் இதுக்கு காரணம்!!
- பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி.. கோவத்துல கணவர் செய்த பதறவைக்கும் காரியம்..!
- வெளுத்துவாங்கப்போகும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு இப்படித்தான்.. 18 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுமையம் கொடுத்த வார்னிங்..!
- விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கணவனுக்கு தெரியவந்த உண்மை.. உடனே சுதாரிச்சுக்கிட்ட மனைவி போட்ட பிளான்.. மொத்த கேஸையும் முடிச்சு வச்ச ஒரு போன்கால்..!
- 30 நாளுல 36 லட்சம்.. "கல்யாணம் பண்ண போறவரு தானேன்னு" நம்புன பெண்.. கதி கலங்க வெச்ச 'Voice' மெசேஜ்!!
- கணவரின் சம்பளம் எவ்வளவு..? தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடிய மனைவி.. அதிரவைக்கும் பின்னணி..!
- மளிகை சாமான் வாங்கச்சொன்ன மனைவி.. சோர்வுடன் கடைக்கு போன கணவனுக்கு திடீர்னு தோன்றிய விஷயம்.. ஒரே இரவில் மாறிய வாழ்க்கை..!
- "முதல் மனைவி தான் வேணும்னா நான் எதுக்கு".. கோபத்தில் இருந்த 2 ஆவது மனைவி..? இரவில் அரங்கேறிய கொடூரம்!!