‘தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும்...’ ‘கொரோனா வேகமாக பரவுது...’ விடுமுறை அளிப்பது குறித்து உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முன்னதாகவே விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வழக்கிற்கு உயர்நீதிமன்றம்  மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த இரண்டு மாதங்களாக தன்னுடைய வீரியத்தால் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சுமார் 4500 மேற்பட்ட மக்கள் இந்த வைரசால் இறந்துள்ளனர், மேலும் கிட்டத்தட்ட 1,50,000 மேற்பட்டோர் கொரோனோவால் பாதிப்படைந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு நேற்று  வெளியிட்ட அறிக்கையில் கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் உலக தொற்று நோயாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு அளித்து  வருகிறது.

சென்னை  மகாலிங்கப்புரத்தை சேர்ந்தவர் ராஜவேலு. கொரோனா பரவி வரும் இந்த சூழலில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஒரு  சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற இயலாது. இந்த வைரஸ் குழந்தைகளையும், முதியவர்களையும் தான் உடனே தாக்குகிறது என்றும், கொரோனோவிற்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தற்காத்து கொள்வதே ஒரேவழி எனவே தமிழக பள்ளிகளுக்கு விரைவாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்தியாவில்  வைரஸ் பரவிய மற்ற மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 2019 - 20ம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில்தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டனர். அதேசமயம், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடரும்படி தமிழக அரசுக்கு அறிவிறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்

SCHOOL, HIGHCOURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்