‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழக அரசிடம் போதுமான அளவு முகக்கவசம் இருப்பதாகவும், கிருமிநாசினி மற்றும் முகக்கவசம், கூடுதல் விலைக்கு விற்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
பின்னர், 10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள், கொரோனா நடவடிக்கைகள் குறித்த அறிக்கையுடன், பள்ளித் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாகவும், மார்ச் 23-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பது குறித்து’... ‘டிஎன்பிஎஸ்சி புதிதாக வெளியிட்ட தகவல்’...
- 'நடுராத்திரி தங்கச்சி ரூமில் கேட்ட அலறல்'...'பதறி அடித்து ஓடிய அக்கா'... அதிரவைத்த கொடூர காட்சி!
- ‘தள்ளி வைக்கப்படும்’... ‘10, 12- வது சிபிஎஸ்இ, ஜேஇஇ மெயின் தேர்வுகள்’... 'மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
- 'போட்ட பிளான் எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டீச்சர்'... வாட்ஸ்-அப்பில் ட்விஸ்ட் வைத்த ஆசிரியர்கள்!
- 'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை'... ‘தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து வெளியான தகவல்’... ‘திரையரங்குகளும் மூடல்!
- கொஞ்சம் கூட 'சுத்தம்' இல்ல, 'கைகழுவ' தண்ணி இல்ல... மொதல்ல 'அதை' இழுத்து மூடுங்க... ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்த நபர்!
- 'இறந்த' பின்னும் மகனுக்கு 'தூக்க' மாத்திரைகளை கொடுத்து ... மகளுக்கு அவசர 'கல்யாணம்' நடத்திய தாய்... 3 வருடங்களுக்குப்பின் வெளியான ட்விஸ்ட்!
- 'தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு'... 'அறிவிக்கப்பட்ட விடுமுறை திடீரென நிறுத்திவைப்பு'... விபரங்கள் உள்ளே!
- கொரோனா முன்னெச்சரிக்கை: 'தமிழக' மாணவர்களின் 'விடுமுறை' குறித்து... புதிய அறிவிப்பை 'வெளியிட்ட' அரசு!
- பல வருஷமா ‘அரியர்ஸ்’ வச்சுருக்கவங்களுக்கு கடைசி வாய்ப்பு...! அப்ளை பண்ண கடைசி தேதியும் அறிவித்தது அண்ணா பல்கலைகழகம்...!