'புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் நடந்த பிரச்சனை'... 'வேலைக்கார இளம் பெண் சொன்ன பொய்'... காட்டிக்கொடுத்த சிசிடிவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல கிராமியப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி, மற்றும் அனிதா குப்புசுவாமி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் விஹா என்ற பெயரில் வீட்டின் ஒரு பகுதியில் ஆர்கானிக் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இங்கு மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவர் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நாங்கள் வேலை செய்ததற்கான உரியச் சம்பளத்தைக் கேட்டதற்கு தங்களை அடைத்து வைத்து தாயை வரச்சொல்லி காலில் விழச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியே செல்லும்படி கூறியதாகப் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புகார் குறித்து அனிதா குப்புசாமியிடம் விசாரித்த காவல்துறையினர் சம்பவத்தன்று வீட்டில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தான் சிறுமிகள் கூறியது பெரிய பொய் என்பது வெட்ட வெளிச்சமானது. இருவரும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் என்பதால் ஞாயிற்றுக் கிழமை வேலை செய்ததற்குச் சம்பளமாக 200 ரூபாய் வழங்கியுள்ளனர். இந்நிலையில் புஷ்பவனம் குப்புசுவாமி தம்பதியர் கச்சேரிக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் மகள் மட்டும் தனியாக இருந்த நிலையில், சம்பளம் குறைவாக இருப்பதாகக் கூறி அந்த சிறுமிகள் தங்கள் தாயை அழைத்து வந்து வீட்டில் தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து மறுநாள் வெளியூரிலிருந்து வந்த புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி, இரு சிறுமிகளையும் அவர்களது பெற்றோரையும் வரவழைத்து வீட்டில் வைத்து போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஆதார் ஜெராக்ஸில் தங்களது பிறந்த நாளை திருத்தி கொடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி இருவரும் பணிக்கு வேண்டாம் என கூறியதால், தங்களது மகளை அடித்த அவர்களது தாய், அனிதா குப்புசாமியின் காலில் விழச்செல்ல அதற்கு இடம் கொடுக்காமல் வெளியே செல்ல கூறியுள்ளார்.

இதனால் மைனர் சிறுமிகள் பணிக்கு வேண்டாம் என்று கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்ததால், அதை மறைக்க தங்களைத் துன்புறுத்தியதாகப் பொய்யான புகாரைக் கூறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமிகள் கூறிய புகார் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அவர்கள் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிசிடிவி கேமரா குற்றம் செய்பவர்களை மட்டுமல்லாது, பொய்யான குற்றச்சாட்டினை கூறுபவர்களையும் காட்டி கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

மற்ற செய்திகள்