'காவிரி கரையோரம் வசிக்கும்'... '12 மாவட்ட மக்களுக்கு'... 'வெள்ள அபாய எச்சரிக்கை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கனமழை காரணமாக, காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில், கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஒகேனக்கல்லில் இருந்து வரும் நீரால், மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அங்கிருந்து உபரி நீர் காவிரி ஆற்றிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்தனர்.

இதையடுத்து காவிரி பாய்ந்தோடும், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் வெளியேறவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CAUVERY, RIVER, BANKS, TAMILNADU, KARNATAKA, SALEM, FLOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்