‘கொரோனாவா நாமளானு பாத்துடுவோம்!’.. ‘சென்னையில்’ தயாரான எக்ஸ்க்ளூசிவ் சிகிச்சை மையம்.. என்னலாம் ஸ்பெஷல்?’ ஒரு நேரடி விசிட்! .. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சமூக விலகல், சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய வழிமுறைகளாக கடைபிடிக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கென சிறப்பு சிகிச்சை மையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. 500 வென்டிலேட்டர்களுடன் கூடிய இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில், 350 சிறப்பு படுக்கை வசதிகள் உள்ளன.

ஒவ்வொரு படுக்கையும் 3 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு அடுக்கு மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையின் கீழ்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளது. இங்குதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவர்.  இந்த மருத்துவமனையை இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டதோடு மருத்துவமனை, செயல்பாட்டிற்கு வருவதற்காக திறந்தும் வைத்துள்ளார். இதேபோல் இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறையையும் முதல்வர் பார்வையிட்டுள்ளார்.

இந்த மருத்துவமனைக்கு நேரடி விசிட் அடித்த பிஹைண்ட்வுட்ஸ் பிரத்யேக செய்தியாளர்,  “இங்கு வருபவர்கள் எல்லாத்துக்கும் சானிட்டைஸர் கொடுத்து அவங்கள முழுசா சுத்தப்படுத்திதான் உள்ளே அனுப்புறாங்க. அதே மாதிரி இந்த மருத்துவமனையில் மொத்தம் ஏழு தளங்கள் இருக்கு. இதில் கீழ்தளத்தில் எமர்ஜென்ஸி பிரிவும், முதல் 2 ஃப்ளோர்களில் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு சிகிச்சை மையத்தில்தான் சிகிச்சை அளிக்க போறாங்க. மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும், செவிலியர்களும் 7வது தளத்தில் இருக்க போறாங்க. எல்லா நாட்களிலும் சிகிச்சை அளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இந்த கட்டமைப்புகளைப் பார்த்தாலே அரசு கொரோனாவை எதிர்கொள்ள தயாரா இருக்கு என்பது தெரியவருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

HOSPITAL, TNHEALTH, CORONACAREUNIT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்