'மருமகனுக்கு' ஏற்கேனவே ஒரு 'மனைவி'... 'ஆத்திரத்தில்' கத்திரிகோலால் மாமனார் செய்த 'காரியம்'... பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவர் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்ததால் மாமனார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் வெள்ளகோவில் புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சூர்யா என்பவரின் மகள் சினேகா என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகளும், பிறந்து 10 நாளே ஆன குழந்தையும் உள்ளது. சூர்யாவும் வெள்ளகோவில் பேருந்து நிலையம் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். மாமனார்- மருமகன் இடையே வியாபாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜசேகருக்க ஏற்கெனவே திருமணம் நடைபெற்றது சூர்யாவுக்கு தெரியவந்தது. இதனால் மருமகன் ராஜசேகர் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்திற்கு வந்த சூர்யா, அங்கு பேருந்துக்காக காத்திருந்த ராஜசேகருடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வார்த்தை முற்றி சண்டையிட்டுக் கொண்டனர். இந்நிலையில் சூர்யா மறைத்து வைத்திருந்த கத்திரிக் கோலை எடுத்து ராஜசேகரின் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த பேருந்து நிலையத்திலிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘காதலனுடன்’ சேர்ந்து ‘மிளகாய்ப் பொடி’ தூவி... ‘15 வயது’ மகள் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்... ‘காதலர்’ தினத்தன்று பெண் ‘காவலருக்கு’ நேர்ந்த கொடூரம்...
- 12 ஆண்டுகளுக்கு முன் 'தந்தை' கொலை... 'குற்றவாளி' குடும்பத்துக்கு 'இன்ப' அதிர்ச்சியளித்த மகள்!
- ‘அப்பாவிடம் தகராறு செய்த வேன் டிரைவர்’.. ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..!
- ‘சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்’.. அருகே கிடந்த ‘மதுபாட்டில்கள்’.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
- 'மனைவியை' கொன்று... இறந்த பின்னரும் 'கணவன்' செய்த கொடுமை... 'அதிர்ச்சியில்' உறைந்து போன மக்கள்!
- ‘9 நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த’... ‘ஒட்டுமொத்த குடும்பம்’... ‘ஒரே நாளில் நிலைகுலைய செய்த சம்பவம்’!
- 'மனைவி' ஊரில் இல்லாத நேரத்தில்... 17 வயது பக்கத்து வீட்டு பெண்ணை 'கடத்தி' சென்ற கணவன்.... 'போக்சோ' சட்டத்தில் கைது...
- அவ உனக்கு 'தங்கச்சி' வேணும், இப்டி பண்ணாத... 'கண்டித்த' அண்ணன்... கடைசியில் நடந்த பயங்கரம்!
- ‘மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை’.. அடுத்து 13 வயது மகனை சுட முயன்றபோது நடந்த பயங்கரம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!