நீண்ட நேரமாக எடுக்காத பேருந்து - தட்டிக்கேட்ட பெண்ணைத் தள்ளிவிட்ட டிரைவர் - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் !!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நீண்ட நேரமாக பேருந்து எடுக்காததை கண்டித்து தட்டிக்கேட்ட பெண்னை ஒட்டுனர் ஒருமையில் பேசி தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்த முகமது ஜின்னா டவர் விவகாரம்!.. குண்டூரில் கொந்தளித்த பாஜக.. அரசு எடுத்த அதிரடி முடிவு!

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த முருமதா என்பவர் அவரது கணவருடன் பாரிஸ் செல்வதற்காக பெரும்பாக்கம் பணிமனைக்கு வந்துள்ளார்.
காலை 5.10க்கு எடுக்க வேண்டிய பேருந்து 5.30 மணி ஆகியும் பேருந்து எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்த முருமதா ஒட்டுனரை தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது, பேருந்து ஒட்டுனர் முருமதாவை ஒருமையில் பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பேருந்து ஒட்டுனர் செந்தில் முருமதாவை தாக்கி கீழே மேலும், சுற்றி இருந்த பொதுமக்கள் தடுத்தும், விடாது அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் கீழே தள்ளிவிட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒட்டுனரின் இந்த செயலால் பயணிகள் தடுக்க முயற்சித்தும் கேட்கவில்லை.

மேலும், தள்ளிவிட்டதில் அப்பெண் மயங்கியதால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள்  ஒட்டுனரைக் கண்டித்து பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தகாத முறையில் நடந்துக் கொண்ட ஒட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

சத்குரு ஜக்கி அவர்களே இதற்கு காரணம் - மர விவசாய முறைக்கு பாராட்டு தெரிவித்த நடிகை !!...

ATTACK, DRIVER, WOMEN, BUS STAND, CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்