பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 129 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertising
>
Advertising

தமிழகத்தில் 528 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 12 சிறப்பு நிலை பேரூராட்சிகள், 222 தேர்வு நிலை பேரூராட்சிகள், 214 முதல்நிலை பேரூராட்சிகள், 80 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகள் 17 மண்டலங்களாகப் பிரித்து நிர்வாகங்கள் நடக்கின்றன. கடந்த காலங்களில் 2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 69 பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்பட்டன. தற்போதுவரை 40 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டன. இதுதவிர சில நகராட்சிகள் மாநகராட்சியாகும்போது அவற்றுடன் சுற்றியிருக்கிற 10-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் உள்ளன.  இந்நிலையில், காலை 10 மணி நிலவரப்படி பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 624 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.129 இடங்களில் அதிமுகவும்,  259 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.  காங்கிரஸ் 6, பாஜக 3, மார்க்சிஸ்ட் 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

திண்டுக்கல் நத்தம் பேரூாட்சி 4 வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி. நத்தம் பேரூராட்சி 4வது வார்டில் நாம் தமிழர் வேட்பாளர் பவுன்ராஜா 10 வாக்குகள் பெற்றார். சுயேட்சை வேட்பாளர் ஜீவானந்தம் 26 வாக்குகள் பெற்றார்.  பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் ஒரு சுயேச்சை மற்றும் 8 திமுக வேட்பாளர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தவர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில்  802 பதவிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றது .இன்று 17 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கோவை மாநகராடசியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது.

கோவை மாநகரில்  2400 போலீசாரும், புறநகர் பகுதியில்  1460 போலீசாரும் என மொத்தம் 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். ராமநாதபுரம் கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 14 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி. 1 இடத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் திமுக 18 மாநகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது.

MUNICIPALITY ELECTION RESULTS, URBAN LOCAL BODY ELECTION, AIADMK, DMK, CONGRESS, VCK, BJP, TAMILNADU, CM STALIN, EDAPPADI PALANISAMY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்