'போய் எங்க குழந்தைங்கள பார்த்தாலே போதும்...' 'இதனால எந்த சிரமமும் இல்ல...' கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கால் கடுக்க நடக்கும் தம்பதி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெண் ஒருவர் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு பல்லடத்திலிருந்து சிதம்பரம் வரை 320 கிலோமீட்டர் கணவரோடு நடந்து செல்லும் சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

வளந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் நிலைகுலைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு சில மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தாலும் அதனை போக்கும் வகையில் அரசு பல்வேறு நல திட்டங்களை நாளுக்கு நாள் அறிவித்து கொண்டு வருகிறது.

ஒரு சில இடங்களில் மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு நடைபயணமாக செல்கின்றனர். இதேபோல் தற்போது ஒரு பெண்மணி தனது கணவருடன் பல்லடத்திலிருந்து 320 கிலோமீட்டர் தாண்டி உள்ள தனது சொந்த ஊரான சிதம்பரத்திற்குக் கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்டு நடந்தே சென்றுகொண்டிருக்கிறார்.

ராதா என்ற இந்த பெண்ணும் இவரது கணவரும் பல்லடத்தில் ஒரு கம்பனியில் வேலை செய்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் கம்பனியில் வேலை இல்லை எனவும், தங்களிடம் இருந்த காசை வைத்து கடந்த வாரம் முழுவதும் சமாளித்து கொண்டிருந்ததகாவும் கூறினார். மேலும் இவரது குடும்பத்தார், இரு பிள்ளைகள் அனைவரும் சிதம்பரத்தில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டும் இல்லாமல் சிதம்பரத்தில் இருக்கும் தங்களுடைய குடும்பத்தாரையும், பிள்ளைகளை காண வேண்டும் என முடிவு செய்து, தேவையான தண்ணீரையும், சாப்பாட்டை கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் வெளிமாநிலங்களுக்கு செல்ல தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளின் கீழ் பல்லடம் காவல்நிலையத்தில் இருந்து அனுமதி கடிதம் கொடுத்த பின் தான் கிளம்பியதாகவும் கூறியுள்ளனர். மேலும் மின்வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மாஸ்க் கொடுத்து உதவியதாவும், லாரிகளின் உதவியோடு சில கிலோமீட்டர்களை கடந்துள்ளோம். இன்னும் கடக்க வேண்டிய தொலைவு நிறைய உள்ளது நானும் என் கணவரும் உற்சாகத்தோடு ஒன்று சேர்ந்து கடந்து எங்களின் சொந்த ஊரை சென்றடைவோம், எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை எங்கள் பிள்ளைகளை பார்த்தால் போதும் என்று பூரிப்போடு கூறியுள்ளார் ராதா.

WALKING

மற்ற செய்திகள்