'நாங்க மாட்டு வண்டியில போய்...' கல்யாணம் பண்ண 'ரெண்டு' காரணம் இருக்கு...! - ஏரியால மாஸ் காட்டிய ஜோடி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்று திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணம் என்றால் ஆடம்பரம் என்றே நம் நினைவிற்கு வரும். முன்பெல்லாம் மாட்டுவண்டி, குதிரை வண்டியில் மணமக்கள் ஊர்வலம் வருவார்கள். அதுவும் இன்றைய காலகட்டத்தில் மணமகள் ஊர்வலத்திற்கே ஆடம்பர கார் வைத்து மேல தாளம் கொட்டி விமர்சையாக நடைபெறுவதை நாம் பார்த்ததுண்டு. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக பாரம்பரியத்தை காக்கும் பொருட்டும் மாட்டு வண்டியில் சென்று தம்பதியினர் திருமணம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மலவிளை பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் உள்ள உணவகத்தில் வேலை செய்யும் விஜூ என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயசாமிலி என்பவருக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கபட்டு, நேற்று (15.02.20221) மலவிளையை அடுத்த பெனியல் சிஎஸ்ஐ தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது மணமகன் விஜூ மாட்டு வண்டியில் தேவாலயத்திற்கு வந்து மணமகள் ஜெயசாமிலியை திருமணம் செய்து அதே மாட்டுவண்டியில் வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து கூறிய விஜி மற்றும் ஜெயசாமிலிதம்பதிகள், 'நம்முடைய பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காளை மாடுகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்விற்கும், டெல்லியில் சுமார் 80 நாட்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தான் நாங்கள் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டோம்' என கூறியுள்ளனர்.

                                   

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்