கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்.. காதலியை கரம்பிடித்த வாலிபர்.. இதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் பலரையும் திகைக்க வச்சிருக்கு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் காதலர்கள் வித்தியாமான முறையில் தங்களது நிச்சயதார்த்தத்தை நடத்தி பலரையும் திகைப்படைய செய்திருக்கிறார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "என்னை விட 10 வயது மூத்த பெண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க".. புது மாப்பிள்ளை செஞ்ச காரியம்.. பதறிப்போன உறவினர்கள்.!

திருமண வைபவங்கள் குறித்த கண்ணோட்டம் உலகம் முழுவதுமே மாற்றமடைந்து வருகிறது. வாழ்வின் முக்கிய தருணங்களாக நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தை பார்க்கின்றனர் மக்கள். அதன் காரணமாகவே வித்தியாசமான முறையில் அவற்றை நடத்த மக்கள் விருப்பப்படுகின்றனர். அந்தவகையில் சென்னையை சேர்ந்த காதலர்கள் வித்தியாசமான முறையில் தங்களது நிச்சயதார்தத்தை கடலுக்கடியே நடத்தியுள்ளனர். 50 அடி ஆழத்தில் மோதிரங்களை மாற்றியிருக்கிறார்கள் இந்த சாகச தம்பதி. இதற்கு அவர்கள் சொல்லிய காரணம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

காதல்

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அதே நிறுவனத்தில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவரும் வேலைபார்த்து வந்திருக்கிறார். இருவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. நாளைடைவில் இது காதலாக மாறவே, தங்களது வீட்டினரிடம் கூறியிருக்கிறார்கள் இந்த தம்பதியினர். இருவீட்டாரும் திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 14 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.

நிச்சயதார்த்தம்

தங்களது நிச்சயதார்த்தத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட சுரேஷ் - கீர்த்தனா கடலுக்கடியில் மோதிரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள். கடலில் சேரும் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முடிவை எடுத்ததாக கூறுகின்றனர் இருவரும். இதற்காக நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் இந்த தம்பதிக்கு பயிற்சி அளித்திருக்கிறார். ஆழ்கடலில் நீந்தும் விதம் ஆகியவை குறித்து கற்றறிந்த பின்னரே, ஆக்சிஜன் குழாய் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் கடலில் இறங்கியுள்ளனர் சுரேஷ் - கீர்த்தனா.

கடந்த 14 ஆம் தேதி நீச்சல் வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோருடன் சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த வெட்டுவாங்கேணி கடற்கரை பகுதிக்கு சென்ற தம்பதியினர், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலில் குதித்தனர். 50 அடி ஆழத்தில் மாலை மாற்றிக்கொண்ட இருவரும் மோதிரங்களை ஒருவருக்கொருவர் அணிவித்திருக்கிறார்கள். இது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Also Read | "ஊர்லருந்து வந்ததை வெளில சொல்லிடாதீங்க".. மாமனாரிடம் துபாய் ரிட்டர்ன் மருமகன் கொடுத்த பெட்டி.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. அடுத்தடுத்து வந்த ட்விஸ்ட்..!

CHENNAI, COUPLE, CELEBRATE, ENGAGEMENT, SEA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்