'ஆகா...! விடாம தொரத்திட்டு வருதே...' 'புயல் வேகத்துல போய்கிட்டு இருக்கேன்...' வேற வழி இல்ல, 'இதுல' ஒளிஞ்சுக்க வேண்டியது தான்...! வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரோன் கேமரா மூலம் மக்கள் வெளியில் சுற்றி திரிகிறார்களா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வடக்கு காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் வெளியில் நடமாடுகிறார்களா என சோதனை செய்து வந்தனர்.

அப்போது மண்ணரை பகுதியில் சிறுவர்கள் இணைந்து கேரம் போர்டு விளையாடி வந்துள்ளனர். உடனடியாக போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். இதில் அச்சமடைந்த சிறுவர்கள் திசைக்கொருவராக தெறித்து ஓடத்துவங்கினர். அதில் ஒரு சிறுவன் கேரம் போர்டை கொண்டு மறைந்து அமர்ந்து கொண்டார்.

ஆனால், ட்ரோன் கேமரா சிறுவனை விடாமல் சுற்றி சுற்றி வந்ததால் பயந்து போய் சிறிது தூரம் கேரம் போர்டை தூக்கிக் கொண்டு ஓடி, பின் ஒரு கட்டத்தில் முடியாமல் கேரம் போர்டையும் கீழே தூக்கிப்போட்டு  ஓடிய காட்சிகளை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா வழியாக சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். போலீசார் இந்த வீடியோவை பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக நகைச்சுவையாக வெளியிட்டுள்ளனர்.

வடிவேலுவின் காமெடி டயலாக்கும் கலக்கல் காட்சியும் இணைந்த இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக வைரலாகி உள்ளது.

மற்ற செய்திகள்