'அரை மணி நேரம் தாமதமாக தொடங்கும் ப்ளஸ் டூ பொது தேர்வுகள்...' தமிழக தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதும் தமிழக மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு நேரத்தை அறிவித்துள்ளது தமிழக தேர்வுத்துறை இயக்ககம்.

தற்போது உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் தலைதூக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்திலும் நாளை மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக தேர்வுத்துறை இயக்ககம் மாணவ மாணவியருக்கு ஏற்றார் போல் தேர்வு நேரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி சுற்றறிக்கை வெளிவிட்டுள்ளது.

அதாவது 10 மணிக்கு தொடங்கும் தேர்வானது இனி வரும் நாட்களில் காலை 10.30 மணிக்குத் தொடங்கி மதியம் 01.45 மணிக்கு தேர்வுகள் முடிவடையும் என்றும், மாணவர்கள் வினாத்தாளை வாசிப்பதற்கு 10.30 முதல் 10.40 வரை நேரம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மதியம் 02.45 மணி வரை நேரம் வழங்கப்பட வேண்டும்.

கூடுதலாக தேர்வு மையத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி தேவைப்படும் மாணவர்களுக்கு அதற்குண்டான உதவிகளையும் அரசு செய்துதர வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

மேற்கண்ட அறிவிப்புகள் அனைத்தும் கொரோனா பரவுவதால் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்த வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்   இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

EXAMS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்