'ரஜினிகாந்த், நயன்தாரா' உட்பட... 'ஒரு கோடிக்கும் மேல் மக்கள்'...'விடைபெறும் அத்திவரதர்'...பக்தர்கள் வெள்ளம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெரும் நிலையில், மக்கள் வெள்ளத்தில் காஞ்சிபுரம் தத்தளிக்கிறது.
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். xஅத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது.
இதனிடையே கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாள் என்பதால் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விஐபி தரிசனம் நேற்று 2 மணியுடன் நிறைவுபெற்றது. இன்று அத்திவரதரை முக்கிய நபர்களுக்கான வரிசையில் நின்றோ, டோனர் பாஸ் மூலமாகவோ தரிசிக்க முடியாது. பொது தரிசன வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் இன்று மாலைக்குள் காஞ்சிபுரம் நகருக்குள் வரும் அனைவரும் அத்திவரதரை தரிசித்த பிறகே தரிசனம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 17ஆம் தேதி அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் அத்திவரதரை தரிசித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குளக்கரையில் சிதைக்கப்பட்ட நிலையில்’ கிடைத்த சடலம்.. ‘ஆணுக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- ‘புகழ்பெற்ற திருவிழாவின் இன்னொரு முகம்’.. ‘வெளியான அதிர வைக்கும் புகைப்படத்தால்..’ வலுக்கும் கண்டனம்..
- ‘அத்தி வரதர் தரிசனம் முடித்து வெளியே வரும் வழியில்’.. கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை..!
- ‘டிக்டாக் திரைப்பட விழா’.. ‘முதல் பரிசு ரூ.33,333. 2 -வது பரிசு ரூ.22,222’.. ஆனா இது இவங்களுக்கு மட்டும்தான்..!
- ‘எழுந்து நின்றார் அத்தி வரதர்’.. ‘அலைமோதும் மக்கள் கூட்டம்’.. பொது தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு..!
- ‘புத்தகம் வாங்க சைக்கிளில் சென்ற மாணவன்’.. வேகமாக வந்த பஸ் மோதி சக்கரத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!
- “தென்னிந்திய திருடர் குல திருவிழா”!... என்னடா இது புதுசா இருக்கு!
- திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த செவிலியர்.. மருத்துவமனையிலேயே அரிவாளால் வெட்டிய தாய்மாமன்!
- ‘ஒரு வழியா சாமியும் புல்லட்ல வந்தாச்சு’.. தலையில ‘ஹெல்மெட்ட’ நோட் பண்ணீங்களா?
- ஹோலி பண்டிகையில் விபரீதம்: முதலுதவி செய்து காப்பாற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!