'கேக் தான் வாங்கி கொடுத்தோம்...' 'சாப்பிட்ட கொஞ்சம் நேரத்துலையே...' '18 குழந்தைகளுக்கு...' பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் மாவட்டம் அருகில் சாலையில் வந்த நடமாடும் கேக் விற்பனை வாகனத்தில் இருந்து, கேக் வாங்கி சாப்பிட்ட 18 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கேக் தான் வாங்கி கொடுத்தோம்...' 'சாப்பிட்ட கொஞ்சம் நேரத்துலையே...' '18 குழந்தைகளுக்கு...' பரபரப்பு சம்பவம்...!
Advertising
Advertising

விழுப்புரம் அருகே இருக்கும் பொய்கை அரசூரில் சாலையில் விற்பனை செய்த கேக்குகளை அப்பகுதியில் இருக்கும் சிறுவர்களுக்கு வாங்கிக்கொடுத்துள்ளனர் பெற்றோர்கள்.

கேக் சாப்பிட சிறிது நேரம் கழித்து சுமார் 18 சிறுமி மற்றும் சிறுவர்களுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர். 2 வயது முதல் 16 வயதுடைய குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்