'வரதட்சணை கொடுக்கல, உனக்கு வாரிசு ஒரு கேடா'...'யாரும் செய்ய துணியாத காரியம்'... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரதட்சணை கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மருமகளின் வயிற்றில், மாமியார் தீ வைத்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரின் இரண்டாவது மகளான சங்கீதாவிற்கும், சூரியம்பட்டியை சேர்ந்த ராமையன் மகன் முருகானந்தத்திற்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை தொடங்கிய சங்கீதாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. திருமணமான சில நாட்களிலேயே மாமியார் புஷ்பவள்ளி தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சங்கீதாவிடம் மாமியார் புஷ்பவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால் சங்கீதா அனைத்து கொடுமைகளையும் தாங்கி கொண்டு, எதையும் தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். தனது கண்முன்னே மனைவி துன்புறுத்தப்படுவதை பார்த்த கணவர் முருகானந்தமும், எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவை கடந்த 4-ந் தேதி, நீயும் உன் வாரிசும் உயிரோடு இருக்கக்கூடாது என கூறிய புஷ்பவள்ளி, யாரும் செய்ய துணியாத கொடூர காரியத்தை செய்ய முடிவெடுத்தார். தனது மருமகள் மற்றும் அவள் கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து சங்கீதாவின் வயிற்றுப்பகுதியில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சங்கீதாவிற்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சையை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாமியார் புஸ்பவள்ளியை கைது செய்தனர்.
இதனிடையே சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. அதில் மிகவும் உருக்கமாக பேசியுள்ள சங்கீதா, தனக்கு நேர்ந்த கொடுமைக்கு யார் காரணம்? தன்னை தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார்.
மேலும் தன்னுடைய உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், தனது குழந்தையை கணவரிடமோ, மாமியாரிடமோ கொடுக்க வேண்டாம். தனது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.சங்கீதா உருக்கமாக பேசியுள்ள இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவ' கூட கட்டுப்படுத்திடலாம் போல... 'இத' கண்ட்ரோல் பண்ண முடிலயே... அதிரடியில் இறங்கிய போலீசார்!
- 'தற்கொலை' என நினைத்தபோது... '5 வயது' மகன் கூறிய 'அதிர்ச்சி' தகவல்... 'கர்ப்பிணி' பெண்ணுக்கு நிகழ்ந்த 'கொடூரம்'...
- ‘வீட்டில் தகராறு செய்த மகன்’.. ‘கோடாரியை’ கையில் எடுத்த தந்தை.. மதுரையை அதிரவைத்த சம்பவம்..!
- 'திடீர்னு நெஞ்சை புடிச்சிட்டு கீழ விழுந்தாரு'...'பதறிய சக காவலர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'எமலோகத்தில் ஹவுஸ்புல்...' 'எல்லோரும் வீட்ல இருங்க...' 'இருகரம் கூப்பி' கெஞ்சும் 'எமன்...' 'நூதன விழிப்புணர்வு பேனர்...' "வச்சது யார் தெரியுமா?..."
- 'சிறுமியை' பாலியல் பலாத்காரம் செய்ததாக... வாலிபரை 'ஜெயிலுக்கு' அனுப்பிய தந்தை... அடுத்தடுத்த 'ட்விஸ்ட்டால்' அதிர்ந்து போன போலீசார்!
- 16 வயது 'சிறுவனுடன்' திருமணத்துக்கு மீறிய உறவு... கணவர் 'கண்டித்ததால்' விபரீத முடிவெடுத்த இளம்பெண்!
- 'விடுமுறையால்' ஊரில் இருந்தபோது... கண் 'இமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கிராமத்தையே 'சோகத்தில்' ஆழ்த்தியுள்ள சம்பவம்...
- 'ஊரடங்கு' உத்தரவை அமல்படுத்திய... போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 42 பேர் கைது!
- விடுமுறை எடுக்காமல் 'உண்மையை' மறைத்து... வசமாக 'சிக்கிக்கொண்ட' அரசு அதிகாரி... 3 பிரிவுகளின் கீழ் 'வழக்கு' பாய்ந்தது!