"'ஆக்சிடண்ட்'ல ஒரு கால் போயிடுச்சு"... ஆனாலும் என் 'தன்னம்பிக்கை'ய நான் விடல"... '165' கி.மீ தூரம் ஒற்றைக்காலில் 'சைக்கிள்' பயணம்!!... நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி 'வாலிபர்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1994 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் ராஜாவின் இடது கால் துண்டானது. ஊன்று கோல் துணையுடன் தற்போது ராஜா நடந்து வரும் நிலையில், தனக்கான விபத்து இழப்பீடு கேட்டு மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவருக்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனால் வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டி, இது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்ல கடந்த மாதம் மதுரை செல்ல முயன்றார். ஆனால் ஊரடங்கின் காரணமாக, அவரால் மதுரை செல்ல முடியவில்லை. இதனால் தன்னம்பிக்கையை இழந்து விடாத ராஜா, ஒற்றைக்காலில் சைக்கிளில் மதுரை செல்ல முடிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை ஆறு மணிக்கு தஞ்சையில் இருந்து கிளம்பிய ராஜா, சுமார் 165 கி.மீ தூரத்திற்கு சைக்கிள் மூலம் பயணத்தை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஊரடங்கின் காரணமாக இன்னும் எத்தனை நாட்கள் தாமதம் ஆகும் என எனக்கு தெரியவில்லை. அதனால் சைக்கிளிலேயே மதுரை செல்ல முடிவு செய்தேன். ஏற்கனவே நான் ஒரு காலுடன் சைக்கிள் ஓட்டியுள்ளேன். அதனால் எனக்கு சிரமம் தோன்றவில்லை' என தெரிவித்துளளார்.
மேலும், இதன் மூலம் தனக்கு கிடைக்கும் இழப்பீடு தொகையில் ஒரு பங்கை விபத்தால் மாற்றுத்திறனாளியாக மாறிய நபர்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும், மற்றொரு பங்கை அதிக விபத்து நடக்கும் தமிழகத்தில் விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி ஆலோசனை மையம் தொடங்க பயன்படுத்தவுள்ளதாகவும் ராஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கடைசியா எல்லாத்தையும் செக் பண்ண போனேன்.. அப்போ!”.. ‘சப் கலெக்டர் ஆபீஸ் மீட்டிங் ஹாலில்’ ஊழியர் கண்ட அதிர்ச்சி காட்சி.. அலறி அடித்து ஓடிய சம்பவம்!
- "அவங்க ஊருக்கு போய் சந்தோஷமா இருக்கட்டும்ங்க"... '61' இந்தியர்களின் ஃபிளைட் டிக்கெட்டிற்கு உதவி செய்த 'தொழிலதிபர்'... மனதை உருக வைக்கும் 'காரணம்'!!!
- VIDEO : கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்த 'இளைஞர்'... "திடீரென நிகழ்ந்த அந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்"... 'நோயாளி'க்கு செய்த உதவியால்... 'உயர்ந்து' நின்ற மருத்துவர்களின் 'மனிதநேயம்'! - நெகிழ வைக்கும் நிகழ்வு!
- 'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...
- ஏற்கனவே ஒரு 'புள்ள'ய இழந்துட்டோம்... இந்த பாழா போன 'கொரோனா'வால... இருந்த ஒரு தங்கத்தையும் இழந்துட்டு நிக்குறோம்... மனதை நொறுங்க வைக்கும் துயரம்!
- புது 'டிரஸ்'... சிரிப்போட 'செல்ஃபி'... 2 'பொண்ணுங்க' கூட சந்தோஷமா இருந்துட்டு... கடைசியா 'தந்தை' எடுத்த 'விபரீத' முடிவு!
- காரில் நடுரோட்டில் வீசியெறிந்த படுபாதகர்கள்!.. 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!.. தஞ்சையை உலுக்கிய கோரம்!
- "வாழ வேண்டிய எம் பொண்ண.. பொணமா வரவெச்சுட்டீங்களே?".. 'சிங்கப்பூர்' காதலன் அனுப்பிய 'வாட்ஸ்ஆப்' போட்டோ!.. மனமுடைந்த 'இளம்பெண்' எடுத்த 'சோக' முடிவு!
- 'அவங்க' கஷ்டப்படக்கூடாது... 12 வயசுல 'மொத்த' குடும்பத்தையும்... ஒத்த ஆளா தூக்கி சுமக்கும் 'தஞ்சை' சிறுவன்!
- "அப்பாவால நடக்க முடியாது!".. 'சைக்கிளில்' சென்று 'காய்கறி' விற்கும் 'இளம் பெண்'!.. 'காவலர்கள்' கொடுத்த 'சர்ப்ரைஸ்'!