'மதுபானம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...' "வாசகம் மட்டும் எழுதி வச்சிருக்கீங்க..." "நீங்க மட்டும் என்ன திருக்குறளையா எழுதி வச்சிருந்தீங்க..." 'திமுக' உறுப்பினருக்கு 'அமைச்சர்' தந்த 'பதில்' ...
முகப்பு > செய்திகள் > தமிழகம்"மதுபானம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகங்கள் இருக்கிறது. ஆனால் மதுகடைகளை மூடாமல் இருக்கிறதே" என திமுக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் மட்டும் என்ன திருக்குறளையா? எழுதி வைத்திருந்தீர்கள் என அமைச்சர் தங்கமணி காட்டமாக பதிலளித்தார்.
சட்டப்பேரவையின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், "மதுபான கடைகள் அதிகப்படியாக திறந்திருப்பதாகவும், மதுபானம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகங்கள் இருக்கிறது. ஆனால் மதுகடைகளை மூடாமல் இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, "உங்கள் ஆட்சியில் நீங்கள் மட்டும் என்ன திருக்குறளையா எழுதி வைத்திருந்தீர்கள்" என காட்டமாக பதிலளித்தார். மேலும், 2006-2011 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தபோது, விழிப்புணர்வுக்காக கூட நிதி ஒதுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தற்போதைய அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்து மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் "படிப்படியாக மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'Go கொரோனா... கொரோனா Go back!'... கொரோனா வைரஸை கண்டித்து... கோஷங்கள் எழுப்பி 'மத்திய அமைச்சர்' போராட்டம்!... இணையத்தை தெறிக்க விடும் வைரல் வீடியோ!
- 'ஃபோன' எடுத்தா லொக்கு லொக்குன்னு 'சத்தம்' வருது... எங்க பாத்தாலும் 'கொரோனா' பயம்... 'காப்பாத்துங்க' சார்... நாங்க 'புள்ள' குட்டிகாரங்க... 'துரைமுருகன்' கிச்சு... கிச்சு...
- 'கொரோனவால் பாதித்த காஞ்சிபுரம் என்ஜீனியர்’... ‘டிஸ்சார்ஜ் குறித்து அப்டேட் கொடுத்த’... ‘சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்’!
- 'குட் மார்னிங் மக்களே' ... இந்த நாளை இனிய நாளாக ஆரம்பித்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் ... 'கொரோனா' தமிழ்நாடு அப்டேட்
- இன்னும் 'கொரோனாவுக்கே' ஒரு 'தீர்வு' கிடைக்கல... அதுக்குள்ள 'பறவைக்' காய்ச்சல் சீசனா?... கொஞ்சம் 'கேப்பு' விடுங்கப்பா...
- 'என் புருஷனுக்கு யாரும் வேல குடுக்கல, அதுனால தான்' ... பேரனின் மருத்துவ செலவிற்கு வேண்டி ... வயதான தம்பதிகளின் நெஞ்சை உருக்கும் நிலை
- 'விவசாயிகள் படை' சூழ ... மாட்டு வண்டி ஓட்டி வந்த 'முதல்வர்' ... விவசாயிகள் அளித்த 'காப்பாளன் பட்டம்'
- ‘தமிழகத்திற்குள்ளும்’ நுழைந்த ‘கொரோனா’... ‘ஓமனில்’ இருந்த வந்த ஒருவருக்கு ‘வைரஸ்’ பாதிப்பு... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ தகவல்...
- 'கையில் குழந்தைகளும், உடைமைகளுமாய்'... வீதியெங்கும் 'கணவனைத்' தேடி அலைந்த ...பெண்ணிற்கு நேர்ந்த சோகம்
- என்ன 'கண்ணுங்களா' ரெடியா ! ... ஆல் இஸ் வெல் 'மக்களே'.. நாளை ஆரம்பமாகும் 'பிளஸ் 2' தேர்வு'