"நானும் உங்களை மாதிரி இருந்தவன் தான்".. ஆபத்தான முறையில் பயணம்.. மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தலைவாசல் அருகே பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | முதுகில் ஆப்ரேஷன்.. தொடர் ஓய்வில் பும்ரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்னதான் ஆச்சு..?
பேருந்து பயணம்
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைவாசல். இங்கே பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. இதனால் அருகில் உள்ள பட்டுத்துறை, நாகக்குறிச்சி, புத்தூர், ஊனத்தூர், வரகூர் மற்றும் சிறுவாச்சூர் உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள் தினந்தோறும் தலைவாசலுக்கு வந்து செல்கின்றனர். ஆனால், கிராம பகுதியில் இருந்து தலைவாசலுக்கு வரும் மக்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
ஆபத்தான பயணம்
வேலைக்காக தலைவாசலுக்கு வரும் மக்களுக்கும், மாணவர்களுக்கும் சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், தலைவாசலில் இருக்கும் மகளிர் கல்லூரி அருகே ஒரு அரசு பேருந்து வரும்போது அதில் ஏறிய கல்லூரி மாணவர்கள் படிகளில் நின்றபடி பயணம் செய்ததால் நடத்துனர் அவர்களை உள்ளே வரும்படி எச்சரித்திருக்கிறார். அப்போது மாணவர்களுக்கும் நடத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அறிவுரை
இந்த சூழ்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த தலைவாசல் பகுதி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இரு தரப்பினரிடையே பேசி, சமாதானம் செய்து வைத்து மாணவர்களுக்கு அவர் அறிவுரையும் வழங்கி இருக்கிறார். அப்போது மாணவர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் பாஸ்கரன், படிக்கும் நாட்களில் இதேமாதிரி நடந்துகொண்டு போலீஸ் அதிகாரியிடம் அடிவாங்கி இருப்பதாகவும், அப்போது தான் செய்தது தவறு என தெரிந்ததால் அதனை திருத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,"சின்ன வயசுல நானும் உங்கள மாதிரி தான் இருந்தேன். வாடா மச்சான்னு பஸ்ல ஏறி, உயரமா இருந்தவன் எல்லாம் படியிலேயே இருந்துட்டான். அடி விழுந்தது. முரளின்னு ஒரு சப் இன்ஸ்பெக்டர். நான் செஞ்ச தப்புக்காக அன்னைக்கு என்ன அடிச்சார். அதுல இருந்து பஸ்ல போறதையே விட்டுட்டேன். கஷ்டப்பட்டு படிச்சு இன்னைக்கு இன்ஸ்பெக்டரா வந்திருக்கேன். அந்த காலத்துல எங்களுக்குன்னு ஒரு வீடு கூட கிடையாது. ஆனா இப்போ வீடு கட்டி இருக்கேன். என் மகன் வெளிநாட்டுல இருக்கான். ஏன் சொல்றேன்னா நமக்குன்னு பொறுப்பு வேணும். நல்லா படிங்க. வண்டி வர சொல்லிருக்கேன். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம என்கிட்ட கேளுங்க" என்றார்.
Also Read | சிகிச்சைக்காக சென்னை வந்த வங்கதேச பெண்.. விமானத்தில் திடீர் மரணம்.. பரபரப்பான சென்னை விமான நிலையம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ரோபோ.. கார்நாடக பள்ளியில் அறிமுகம்..!
- சாலை ஓரத்தில் வாழ்ந்து.. உயிரிழந்த மூதாட்டி.. சுருக்குப் பையை திறந்ததும் கலங்கி போன போலீஸ்!!
- வாழ்ந்தா.. பேருந்திலேயே உலகம் சுற்றும் குடும்பம்.. உள்ளே இவ்வளவு வசதிகளா..?
- "சாப்பாடு தரமா இருக்கணும்".. அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
- முதல்வர் கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் உடைந்து விழுந்த ராட்சத சிக்னல்.. கள ஆய்வின்போது பரபரப்பு..!
- 118 படம் தயாரித்த சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர் முன் செல்ஃபி எடுத்த முதல்வர்.. வைரல் பதிவு..!
- "எல்லாம் பசங்களுக்காக தான்".. 12 வருசமா அரசு பள்ளி ஆசிரியர் செய்து வரும் அசத்தலான காரியம்.. குவியும் பாராட்டு!!
- Vibe ஆன ரியல் மலர் டீச்சர்.. .. மாணவர்களுக்கே டஃப் கொடுத்த டான்ஸ்..!. வீடியோ
- செல்ஃபி மோகத்தால் ரயிலில் ஏறிய நபர்.. டக்குனு மூடிய கதவு.. வேறு வழியின்றி 159 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்..!
- "தனிமையில் செல்லும் ஜோடிகள் தான் இலக்கு".. பெண்களை ரகசியமா கண்காணித்து வந்த நபர்... திடுக்கிடும் பின்னணி!!