'சோதனையிட வந்த அதிகாரி...' சானிடைசர் எடுத்து கையில ஊத்துன்ன அடுத்த நிமிஷமே...' 'ஷட்டர மூடி கடைய லாக் பண்ணிட்டு கிளம்பிட்டாரு...' - என்ன நடந்தது...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி பயன்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் செய்த காரியத்தினால் கடையை பூட்டி சீல் வைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது ஆடித் தள்ளுபடியால் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளநிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள ஜவுளிக் கடைகளில் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் பெரும்பான்மையாக அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கடைகளில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது அதிகாரி ஒருவர் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்கள் கைகளைக் கழுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியை ஆய்வு செய்துள்ளார். சோதனையில் அது சாதாரண தண்ணீர் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் காரணமாக அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், வாடிக்கையாளர்களை ஏமாற்றிய ஜவுளிக்கடை உரிமையாளரை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்