கல்லூரி ‘மாணவிகளுடன்’ வீடியோ... அவர்களுக்கே ‘தெரியாமல்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... போலீசாரிடம் சிக்கிய ‘டிக்டாக்’ இளைஞர்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிக்டாக்கில் கல்லூரி மாணவிகளுடன் வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 19 வயதான இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். டிக்டாக் செயலியில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ‘காதல் மன்னன் கண்ணன்’ என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளையும் சில வீடியோக்களில் நடிக்க வைத்து அவற்றை பதிவேற்றம் செய்துள்ளார். டிக்டாக் செயலியில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட கண்ணன் மாணவ, மாணவிகள் சிலரை அவர்களுக்குத் தெரியாமலும் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இதையடுத்து அந்த வீடியோக்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என கண்ணன் அவர்களை மிரட்டியுள்ளார். ஒரு மாணவியிடம் 4 லட்சம் ரூபாய் வரை அவர் மிரட்டிப் பணம் பறித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு கண்ணன் மற்றொரு மாணவியிடம் 2 லட்ச ரூபாய் கேட்டு மிரட்ட, பயந்துபோன அந்த மாணவி பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சேர்ந்தமரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

COLLEGESTUDENT, MONEY, TIKTOK, VIDEO, BLACKMAIL, GILRS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்