மகளிர் சுய உதவிக்குழுனா என்ன நெனைச்சீங்க.. 1st Time விமான பயணம்.. அசத்திட்டாங்கல்ல .. நெகிழ்ச்சி பின்னணி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்காசி : விமானத்தில் பயணம் செய்வதற்கு வேண்டி, மகளிர் சுய உதவிக் குழுவினர் எடுத்த அசத்தல் முயற்சி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

நமது தலைக்கு மேலே, உயர பறக்கும் விமானத்தை பார்க்கும் போதெல்லாம், ஒரு முறையாவது அதில் பயணம் செய்து ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவரது மனத்திலும் தோன்றும்.

ரெயில், பேருந்து என இவற்றுள் எதில் பயணப்பட்டாலும், விமான பயணம் என்ற கனவு, நிச்சயம் பல சாதாரண மக்களுக்கு எட்டாத காரியம் தான்.

மகளிர் சுய உதவிக் குழுவினர்

சமீபத்தில் கூட, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த 'சூரரைப் போற்று' திரைப்படத்தில், ஏழை எளிய மக்கள் விமானத்தில் பயணிக்க வேண்டி, ஒருவர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய கதை இடம்பெற்றிருந்தது. ஏதோ வாழ்வின் லட்சியம் போல இருக்கும் இந்த விமான பயணத்தை மேற்கொள்ள வேண்டி, ஒரு மகளிர் சுய உதவிக் குழுவினர் செய்த காரியம் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சிறுக சிறுக சேமித்த பணம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தினால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. மேலும், இதனால் பல பெண்களின் வாழ்க்கைத் தரம், முன்னேற்றம் அடையவும் செய்துள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர், விமான பயணம் செய்ய வேண்டும் என விருப்பம் கொண்டுள்ளனர். அதன்படி, தங்களின் கனவுகளை நனவாக்க எண்ணிய அவர்கள், கடந்த ஒரு வருடமாக சிறுக சிறுக தங்களுக்கு கிடைக்கும் பணத்தினை சேமித்தும் வந்துள்ளனர்.

அதிகம் வைரல்

இதனைத் தொடர்ந்து, தாங்கள் சேமித்த பணத்தைக் கொண்டு, இன்று மதுரை வந்த அவர்கள், முதல் முறையாக விமானத்தில் சந்தோஷத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

குவியும் பாராட்டு

சாதாரண மக்கள் அதிகம் பயணிக்காத விமானத்தில், ஒரு முறையாவது ஏறி விட வேண்டும் என்ற முடிவில், கொஞ்சம் கூட மனம் தளராமல், சிறுக சிறுக பணம் சேமித்து, அதில் வெற்றியும் கண்டு பாராட்டுக்களை அள்ளிக் குவித்துள்ளனர், தென்காசி ஆலங்குளம் கிராமத்தின் மகளிர் சுய உதவிக்குழுவினர்.

TENKASI, MADURAI AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்