பறந்து பறந்து கல்யாணம்...! 'விமானத்தை கல்யாண மண்டபமாக்கிய ஜோடி...' - எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் விமான ஊழியர்களுக்கு கெடச்ச 'ஷாக்' தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் உள்ள தொழிலதிபரின் மகன் ராகேஷ்க்கும், மற்றொரு தொழிலதிபரின் மகள் தீச்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா தொற்று காலம் என்பதால் திருமணத்தை எளிமையாக நடத்த விரும்பவில்லை.குறைவான உறவினர்கள் வைத்து வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். அப்போது தான் கொரோனா வைரஸ் வராமல் இருக்கும்படியாக விமானத்தில் பறந்தவாறு திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து மதுரையிலிருந்து தூத்துக்குடி தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு செய்தனர். அதன்படி விமானத்தில் திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன் ராகேஷ் மணமகள் தீச்சனாவுக்கு தாலி கட்ட திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்காக விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தான் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர். மதுரையில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆனால் அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் மாஸ்க் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்துறை இயக்குநகரம் விசாரணைக்கு உத்தரவிட்டது.மேலும் திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்