‘இனி சென்னை மக்கள் காய்கறி இங்கே போய்தான் வாங்கணும்’.. தற்காலிகமாக இடம் மாறும் கோயம்பேடு மார்கெட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பேடு மார்கெட்டுக்கு சென்று வந்த பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கோயம்பேடு மார்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதுவரை 3,023 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் இதுவரை 1724 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில தினங்களாக கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடைய பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்ததை அடுத்து, கோயம்பேடு மார்கெட் மூடப்பட்டது.
இந்த நிலையில் சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான பகுதியில் தற்காலிக கோயம்பேடு காய்கறி சந்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 100 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் முதற்கட்டமாக 100 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் இருக்கும் முட்புதர்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றி நிலங்கள் சமப்படுத்தப்படுகிறது.
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒவ்வொரு கடையும் 200 சதுர அடியில் அமைக்கப்படுகிறது. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 5 அடி இடைவெளி விடப்படுகிறது. வரும் 7ம் தேதி காலையில் இருந்து தற்காலிக கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை இங்கே செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிக மூடல்!.. மார்க்கெட் நிர்வாகம் அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 527 பேருக்கு தொற்று உறுதி!.. என்ன காரணம்?.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!
- சென்னை ஆவின் ‘பால்பண்ணை’ ஊழியர்கள் 2 பேருக்கு ‘கொரோனா’ தொற்று..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
- 'ஒரு நிமிஷம் போகாதன்னு சொல்லி இருந்தா'... 'பொண்ணு உசுரோட இருந்திருக்குமே'...சென்னை அருகே நடந்த சோகத்தின் உச்சம்!
- ஒரே மாவட்டத்தில் இன்று '107 பேருக்கு' கொரோனா... 'கோயம்பேடு' மார்க்கெட் மூலம் தொடர்ந்து 'உயரும்' பாதிப்பு...
- 'மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட...' '750 திருமண மண்டபங்கள்...' 'தனியார் மற்றும் அரசு பள்ளிகள்...' 'அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் சென்னை...'
- 'கொரோனா' பரப்பும் 'காய்கறி சந்தைகள்...' 'கோயம்பேட்டைத்' தொடர்ந்து 'பீதியை கிளப்பிய ஏரியா?...'
- தமிழகத்தில் இதுவரை 'இல்லாத' உயர்வு... '12 மாவட்டங்களில்' இன்று 'புதிய' பாதிப்பு... 3000ஐக் கடந்த 'மொத்த' எண்ணிக்கை... 'விவரங்கள்' உள்ளே...
- 'சென்னை உள்பட தமிழகத்தில்’... ‘நாளை முதல் எவையெல்லாம்’... ‘எவ்வளவு நேரம் செயல்பட அனுமதி'!
- VIDEO: கொரோனா முன்கள வீரர்களுக்கு மரியாதை!.. பூ மழை பொழிந்த ஹெலிகாப்டர்கள்.. மனம் நெகிந்த மருத்துவர்கள்!