'கண்டா வர சொல்லுங்க'... 'எம்.பி.யை காணவில்லை என்று முகநூலில் பதிவிட்ட நபர்'... இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.பி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்று முகநூலில் ஒருவர் பதிவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் அருகே நயினாரகரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ‘‘தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை, யாராவது கண்டால் எங்கள் கிராமத்துக்கு வரச்சொல்லுங்கள்” என்று முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமாரின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து அந்த கிராமத்துக்குச் சென்று அந்த இளைஞரை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கினார். அப்போது அந்த இளைஞர், ‘‘எங்கள் ஊருக்கு பொது கழிவறையும் பேருந்து நிழற்குடையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதை இது வரை நீங்கள் செய்யாததால் இவ்வாறு பதிவிட்டேன் என்று கூறினார்.
இதைக் கேட்ட தனுஷ் குமார், ‘‘ கோரிக்கையை நிறைவேற்ற தயாராக உள்ளேன். கொரோனா காரணமாகத் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் தொகுதி முழுவதும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நிதி வந்ததும் உங்கள் ஊருக்கு பொதுக் கழிப்பிடமும், பேருந்து நிழற்குடையும் அமைத்துத் தருவேன்’ என வாக்குறுதி அளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு கோடி ரெண்டு கோடி இல்ல, 12 கோடி'... 'தென்காசிகாரருக்கு அடித்த ஜாக்பாட்'... ஆனா அதுலயும் ஒரு சின்ன 'ட்விஸ்ட்'!
- தயவுசெஞ்சு பைக்கை எடுக்குமுன் இதை ‘செக்’ பண்ணுங்க.. நூலிழையில் உயிர்தப்பிய ‘மெக்கானிக்’.. உருக்கமான வேண்டுகோள்..!
- டீ குடிக்க பைக்கில் போன ‘மெக்கானிக்’.. பாதி வழியில் வண்டியை நிறுத்தி கண்ட ‘காட்சி’.. வெலவெலத்துப்போன மக்கள்..!
- "தம்பி ஆம்புலன்ஸ் வெயிட்டிங்"... "சீக்கிரம் கொஞ்சம் 'பக்கோடா'வ போடுப்பா"... 'கொரோனா' உறுதியான நிலையில் ஷாக் கொடுத்த 'பெரியவர்'...!!
- 'ஊரடங்கு நேரம்'... 'காலியான' சாலையில் "அசுர" வேகத்தில் வந்த 'கார்'... நடந்து சென்ற மூவருக்கு நேர்ந்த 'பரிதாபம்'!
- ‘என்ன மன்னிச்சிருங்க ஆச்சி’!.. ‘அவங்க ரொம்ப பாவம்’.. சிக்கிய உருக்கமான கடிதம்..! நொருங்கிபோன குடும்பம்..!
- 'புதுமாப்பிள்ளையை துடிக்கவிட்டு கொன்ற மச்சான்'...'இதான் காரணமா'...ஒரு நிமிஷம் ஆடிப்போன போலீசார்!
- விடிந்தால் 'திருமணம்' ... நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த 'மர்ம' நபர்கள்... அதிர்ச்சியில் உறைந்த 'மாப்பிள்ளை' குடும்பம்
- ‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...
- ‘மகளை காப்பாத்தணும்’!.. ‘ஆனா நீச்சல் தெரியாது’!.. ‘கதறி அழுத பக்கத்துவீட்டு பெண்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!