'உங்க ஏரியாவில் மழையால் பவர்கட்டா?'... '24 மணிநேரமும் தடையின்றி’... ‘இந்த நம்பர்களில் புகார் தெரிவிக்கலாம்’... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மின்தடை தொடர்பான பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

வழக்கமாக பராமரிப்பு பணிகளுக்காக சில இடங்களில் மின்தடை ஏற்படும். ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பல இடங்களில் மின்சாரம் இன்றி தவிக்கும் சூழ்நிலை நிலவும். இதனால், தங்கு தடையின்றி மின்சாரத் தடை மற்றும் மின்சாரம் சார்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்க தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 1912 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், மின்வாரிய தலைவர் புகார் மைய எண்களான 044-2852 4422 மற்றும் 044-2852 1109 எண்களுக்கும் அழைக்கலாம். வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்க 94458-50811 என்ற எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அமைச்சரின் முகாம் அலுவலக எண் 044-2495 9525 என்ற எண்ணில், 24 மணிநேரமும் தடையின்றி புகார்களை தெரிவிக்கலாம். இந்த எண்கள் மின்சார வாரியத்தின் இணையதள முகவரியிலும் (www.tangedco.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்து உள்ளார்.

TNEB, ELECTRICITYBOARD, RAIN, CHENNAI, COMPLAINT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்