வீட்டிலிருந்தே ‘வீடியோ கால்’ மூலம் டாக்டரிடம் இலவச ஆலோசனை.. சென்னை மாநகராட்சி ‘சிறப்பு’ ஏற்பாடு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களிடம் இலவசமாக ஆலோசனை பெற சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தபடியே பெறும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் GCC Vidmed என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆலோசனை தேவையுள்ளோர் 24 மணிநேரமும் இந்த ஆப் மூலமாக வீடியோ காலில் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி இணை ஆணையர் அல்பி ஜான் தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளின் தேவையை பொறுத்து ‘e-Prescription’ என்ற இணையவழி பரிந்துரை சீட்டும் வழங்கப்படுகிறது. இதை அருகில் உள்ள மருந்தகங்களில் காண்பித்து மாத்திரிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை பெறும் வகையில் 044-25384520 மற்றும் 1913 என்ற இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணை தொடர்பு கொண்டால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்து உடனடியாக விவரம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
GCC Vidmed செயலியை தொடர்ந்து, தற்போது வாட்ஸ்அப் வீடியோ கால் வழியாக சென்னை மாநகர மக்கள் வீட்டில் இருந்தே மருத்துவர்களிடம் இலவசமாக ஆலோசனை பெற மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக 9498346510, 9498346511, 9498346512, 9498346513, 9498346514 என்ற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த நாடுகளுக்கு எல்லாம் போக வேண்டாம்'... 'லிஸ்டில் இருக்கும் நாடுகள்'... அமெரிக்கா எச்சரிக்கை!
- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு Martin Group உதவி!
- தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை!.. ஒரே இரவில்... ராக்கெட் வேகத்தில் உயர்வு!.. எப்படி நடந்தது?
- 'இந்த நேரத்துல இப்படி செய்யலாமா'?... 'தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் நடந்த குளறுபடி'... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
- 'இதுவும் போச்சா'?.. 'டி20 உலகக் கோப்பை நடத்தலாமா? வேண்டாமா'?.. ஐசிசி அவசர மீட்டிங்!.. கடும் விரக்தியில் பிசிசிஐ!
- 'காத்திருந்த சந்தோசமான செய்தி'... 'ஆனா இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் மனைவி'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
- 'தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பா'?... 'மருத்துவ நிபுணர் குழுவுடன் நடைபெறவுள்ள ஆலோசனை'... முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல்!
- 'தயவுசெஞ்சு இத கண்டிப்பா செய்யுங்க'... 'இல்ல 3-வது அலை தாக்கும்'... இந்தியாவுக்கு விஞ்ஞானி எச்சரிக்கை!
- வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது!
- VIDEO: கொரோனா இருக்கா? இல்லையா?.. ‘வீட்டில் இருந்தே கண்டறியும் கருவி’.. ஐசிஎம்ஆர் அனுமதி..!