“ஊரடங்கு நேரத்துல என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்?”.. நடுரோட்டில் கேக் வெட்டிய இளம் பெண்கள்.. தாவிக் குதிக்கும்போது ஜஸ்ட் மிஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஊரடங்கின்போது நடுரோட்டில் 3 பெண்கள் கேக் வெட்டி செய்த அலப்பறைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த இரண்டு முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகளிடையே கூடிய 3 இளம் பெண்கள் அங்கேயே கேக் வெட்டி ஒருவருக்கொருவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொள்வது போல் பூசிக்கொண்டனர்.

ஏதோ பிறந்த நாள் என்பது போல கேக் வெட்டிக்கொள்ளும் இவர்களுள் யாருக்கு பிறந்த நாள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனிடையே அவ்வழியே ரோந்து வந்த காவலர் ஒருவர் இதைக் கவனிக்க, அவருக்கு முன் அவரைக் கவனித்த 3 பேண்களில் காவலரின் பக்கமிருந்த சாலையில் நின்றுகொண்டிருந்த 2 பெண்கள் கிடுகிடுவென பஸ் ஸ்டாப்புக்கு ஓடிவிட்டனர். மீதமிருந்த இன்னொரு பெண் மட்டும் தடுப்புக் கம்பிக்கு அந்தப் பக்கம் முதலில் பதுங்கி பின்னர், அந்த காவலரிடம், சரண்டர் ஆகிவிடலாம் என்று முடிவெடுத்து அப்படி தடுப்புக் கம்பியை தாண்டுகிறார். அப்படி தாண்டி குதிக்கும்போது அந்த சாலையில் வந்துகொண்டிருந்த ஆட்டோவில் அடிபட்டிருந்திருப்பார். அந்த அளவுக்கு ஜஸ்ட் மிஸ்.

இத்தனை அலப்பறைகளுக்கு பின்னர் 3 பெண்களையும் அந்த காவலர் “ஊரடங்குல என்ன காரியம் பண்ணிகிட்டு இருக்கீங்க சிம்ரன்ஸ்?” என்கிற ரீதியில் கண்டிக்க, உடனே மூவரும், “ஆளை விட்டால் போதும் சார்” என்று தத்தம் பைகளை எடுத்துக்கொண்டு,  “எதுக்கு வீடியோ எடுக்குறாங்க?” என்று கேட்டுக்கொண்டே ஓடுகின்றனர். அதற்கு காவலரோ,  “நீங்க பண்ண வேலைக்கு வீடியோ எடுக்காம என்ன பண்ணுவாங்க..” என்று கேட்பதற்குள் அந்த பெண்கள் தூரமாக ஓடி மறைந்தேவிட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்