வறுமையில் தவித்த பள்ளி மாணவி.. ஆசிரியர்கள் செஞ்ச செயல்.. அந்த மனசுதான் சார் கடவுள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கீரனூர் அருகே வறுமையிலும் கஷ்டப்பட்டு படித்துவந்த பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் இணைந்து உதவி செய்திருப்பது பொதுமக்களை நெகிழ வைத்திருக்கிறது.
"நான்தான் சொன்னேன்.. என்கிட்டே உங்க கோபத்தை காட்டுங்க".. பிரதமர் மோடி ஓபன் டாக்.. என்ன நடந்துச்சு..?
கீரனூர்
கீரனூர் அருகே உள்ளது லெக்கனாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி. இங்கே 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். பாடம் நடத்துவது மட்டும் இன்றி மாணவர்களின் துயரை துடைக்கும் முயற்சியிலும் இங்கு உள்ள தலைமை ஆசிரியர் ஆண்டனி மற்றும் சக ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி, இந்தப் பள்ளியில் படிக்கும் சசிகலா என்னும் மாணவிக்கு இந்தப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து உதவி செய்திருக்கின்றனர். இது அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது.
வறுமை
லெக்கனாபட்டி அரசு உயர்நிலை பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவருகிறார் சசிகலா என்னும் மாணவி. 10 ஆண்டுகளுக்கு முன்பே இவரது தந்தை காலமாகிவிட்டார். இந்நிலையில், கூலி வேலைக்கு சென்று தனது மகள் சசிகலா மற்றும் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் சசிகலாவின் தாய் மாரியாயி.
உதவி
கணவர் மரணித்துவிட்ட நிலையில் தனது பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்துக்கொண்டிருக்கும் மாரியாயின் நிலைமையை அறிந்த லெக்கனாபட்டி அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு உதவ நினைத்துள்ளனர். இதனை அடுத்து 5 ஆட்டுக் குட்டிகளை வாங்கி மாரியாயிடம் கொடுத்திருக்கிறார்கள் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.
இதற்காக பள்ளியில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக நிதி திரட்டப்பட்டிருக்கிறது. பள்ளி ஆசிரியர்களும் இந்த நல்ல காரியத்திற்காக பணம் கொடுத்து உதவியிருக்கின்றனர்.
தன்னம்பிக்கை
மாரியாயிடம் இந்த ஆட்டுக் குட்டிகளை புதுகை மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் சாமி சத்தியமூர்த்தி முன்னிலையில் வழங்கி இருக்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, ஆட்டுக்குட்டிகளை வளர்த்து அதன் மூலம் வறுமையை போக்கிடவும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கவும் மாரியாயிக்கு தன்னம்பிக்கை கூறினார்.
வறுமையில் வாடிய பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் இணைந்து ஆட்டுக் குட்டிகளை வழங்கி ஆதரவு கரம் நீட்டிய இந்த செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"ரஷ்யாவுக்கு எதிரா..நாங்க ஜெயிச்சுட்டோம்".. உக்ரைன் அதிபர் மகிழ்ச்சி.. ஓஹோ இதுதான் காரணமா?
மற்ற செய்திகள்
"நான்தான் சொன்னேன்.. என்கிட்டே உங்க கோபத்தை காட்டுங்க".. பிரதமர் மோடி ஓபன் டாக்.. என்ன நடந்துச்சு..?
தொடர்புடைய செய்திகள்
- எனக்கு பரிசு வேண்டாம்ங்க.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பரிசை புறக்கணித்த பள்ளி மாணவி.. என்ன நடந்துச்சு?
- கர்ப்பிணியாக வந்த ‘பள்ளி’ சிறுமி.. சாதுர்யமாக செயல்பட்ட அரசு மருத்துவர்.. நெகிழ வைத்த சம்பவம்..!
- புள்ள குட்டிங்க 'பசியால' துடிக்குது... 'பார்க்க வேதனையா இருக்கு, அதான்...' நாங்க வேற என்ன பண்றது...? - கண்ணீரோடு 'ஆப்கான்' மக்கள்...!
- ஆசிரியர்களுக்கு 'சம்பளம்' பாதியாக குறைக்கப்படுகிறதா...? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கொடுத்த பதில்...!
- ‘கழுத்து நிறைய மெடல்’!.. 2 தடவை தேசிய அளவில் தங்கப்பதக்கம்.. வாழ்க்கையை புரட்டிப்போட்ட வறுமை.. வில்வித்தை வீராங்கனையின் பரிதாப நிலை..!
- '17,686 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான செய்தி!' - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘முக்கிய’ அறிவிப்பு!
- ‘நாங்க வாழ்க்கையில முன்னேர அவங்கதான் காரணம்’.. தேடிக் கண்டுபிடித்து கௌரவம்.. சென்னை அருகே நடந்த நெகிழ்ச்சி..!
- ‘இறந்துபோன மகளின் நினைவாக’... ‘10 ஆண்டுகளாக இடைவிடாமல்’... ‘தந்தை செய்யும் பாராட்டுக்குரிய செயல்’... ‘வியந்து பாராட்டும் நெட்டிசன்கள்’...!!!
- ‘கொரோனா வைரஸால்’... ‘நாம வேணா சோர்வாகி இருக்கலாம்’... ‘ஆனா, அது’... ‘வறுமை, பசிக்கு எல்லாம்’... 'உலக சுகாதார நிறுவனத் தலைவர் வேதனை’...!!!
- “ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!