அரையாண்டு தேர்வு விடுமுறை உண்டா... இல்லையா? ஆசிரியர்கள் சங்க கடிதத்தால் பரபரப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரையாண்டு விடுமுறை கண்டிப்பாக வேண்டும் என பள்ளி கல்வித் துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கைக் கடிதம் எழுதி உள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆக பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளில் பங்கேற்று பாடங்களைக் கற்று வந்தனர். இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு பதற்றம் சற்றே குறைந்த போது கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் தொடங்கின.
முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்த கற்கத் தொடங்கினர். பின்னர் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் தொடக்கப்பள்ளிகளும் செயல்படத் தொடங்கின. இடையில் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைந்து பாடத்திட்டங்களை நிறைவு செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் இறுதியில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக டிசம்பர் இறுதியில் அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அதிகப்படியான விடுமுறைகளால் அரையாண்டு விடுமுறை இருக்காது என்ற செய்தி பரவியது.
இதனால் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பண்டிகை காலங்களில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பொருட்டு விடுமுறை வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரையாண்டு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை கடித்தத்தை ஆசிரியர்கள் சங்கம் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உயிர் பயம்.. ‘பொண்ணுங்க ஸ்கூலுக்கு போகவே பயப்படுறாங்க’.. மதுரை கலெக்டரிடம் பரபரப்பு புகார் அளித்த பெற்றோர்..!
- கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு.. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது 'குண்டாஸ்‘!
- சொடக்கு மேல சொடக்கு போடுது...! நடனமாடி பாடம் நடத்திய ஆசிரியர்
- விடிய விடிய கொட்டிய மழை..20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்'!.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!.. பின்னணி என்ன?
- தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு?.. உயர் அதிகாரிகள் அவசர மீட்டிங்!.. முழு விவரம் உள்ளே
- 'தமிழகத்தில் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறுமா'?... கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்!
- 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி பாஸ்.. முதல்வர் பழனிசாமி ‘அதிரடி’ அறிவிப்பு..!
- பிளஸ்-2 ‘பொதுத்தேர்வு’ அட்டவணை வெளியீடு.. தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
- அதிகாலை 4 மணிக்கு அடித்த போன்!.. "மரத்த வெட்டிட்டாங்க!".. வனத்துறையை அலறவிட்ட சிறுவன்!.. பதறியடித்து ஓடிய அதிகாரிகள்!