சாப்பிட வரமாட்றாங்க.. திருநங்கை சாய்னா பானு போட்ட ட்வீட்.. சென்னை மக்களின் ரெஸ்பான்ஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாழும் சமூகத்தில் ஆண், பெண் என இரு பாலினத்தை கடந்து புரிந்துகொள்ளப்படாத பாலினமாக திருநங்கை, திருநம்பியினர் வாழ்ந்து வருகின்றனர்.  புறக்கணிப்புகளையும், உருவக் கேலிகளையும்,  தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு  நம் சமூகத்தில் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார்கள் திருநங்கைகள். தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகும் சமூகத்திலிருந்து மெள்ள மெள்ள சமூக உயர்வை போராடி வரும் மூன்றாம் பாலினத்தவரை அவர்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், கீழே தள்ளிவிட வேண்டாம்.

Advertising
>
Advertising

பாலினம்

பெற்றோர் புரிதல் இல்லாமல் தனித்து விடப்பட்ட திருநங்கைகள் சுயமாக உழைத்து முன்னேற போராடி கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது கருணையோ, பச்சாதாபம் இல்லை, சுயமரியாதை. திருநங்கைகளை வேற்றுமைப்படுத்துவதும், அவர்களுக்கு எதிரான வன்முறையும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. இவர்கள் எவ்வளவுதான் படித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டாலும் மக்கள் இவர்களை பார்க்கும் பார்வை மறுபட்டதாகவே இருந்து வருகிறது.

ஆனால், வாழ்வாதாரத்திற்கு வழியின்றி பிறரை எதிர்நோக்கியிருக்கும் பல திருநங்கைகளுக்கு மத்தியில், பிழைப்புக்காக உணவகம் நடத்தி முன்னுதாரணமாக உள்ளார் திருநங்கை ஒருவர்.  திருநங்கை என்ற ஒரு காரணத்திற்காக அவரது உணவகத்திற்கு யாரும் செல்வதில்லை என சமூகவலைதளத்தில் ஆதரவு கோரி எழுப்புயுள்ள கேள்வி  சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.

டேஸ்டி ஹட்

சென்னை எழும்பூர்  அருகே  'டேஸ்டி ஹட்' என்ற ஒரு சிறிய உணவகத்தை திருநங்கை சாய்னா பானு நடத்தி வருகிறார்.  செம்பருத்தி திருநங்கைகள் சுய உதவிக்குழு, தனியார் கல்லூரியின் உதவியுடன் வாழ்வாதாரத்திற்காக தொடங்கியுள்ளார்.  பிற கடைகளோடு ஒப்பிடுகையில், இவரது கடையில் குறைந்த விலையில் ருசியான உணவு கிடைக்கிறது.  30 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி, 50 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி, 35 ரூபாய்க்கு சிக்கன் 65 என வகை வகையான உணவு கிடைக்கிறது.

சாய்னா பானு

திருநங்கை  சாய்னா பானு தன் மனதில்  சிறு கனவுகளோடு உணவகத்தை திறந்து, தங்களைபோல் உள்ள மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருக்க விரும்புகிறார்.  இருப்பினும் அவரது உணவகத்திற்கு யாரும் வராததால் மனவேதனை அடைந்த சாய்னா பானு,  தனது பேஸ்புக் பக்கத்தில்  "இதுவே ஒரு ஆண்கள் வச்சிருக்க கடைக்கு, பெண்கள் வச்சிருக்க கடைக்கு போவீங்க வருவீங்க... திருநங்கை வைத்திருக்க கடைக்கு வருவீங்களா? சாப்பிடுவீங்களா? அப்புறம் எதுக்கு சொல்றீங்க நீங்க வேலை செய்ய மாட்டீங்களா?  உழைக்க மாட்டீங்களா? ஏன் சொல்லுவீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைவருக்கும் நன்றி

இதை பார்த்த ஒரு சிலர், அதை ஷேர் செய்தும், சாய்னா பானுவிற்கும் ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளை கண்ட திருநங்கை சாய்னா பானு, மீண்டும் ஒரு பதிவில், "என்னுடைய போஸ்ட்டை ஷேர் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்... இது என்னுடைய மனக்குமுறல் இல்ல மனவேதனை, அதற்கு ஒரு விடிவு காலம் வரும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டு, எங்களுக்கும் ஒரு விடிவு காலம் வரும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

TRANSGENDER SHAINA BANU, SHAINA BHANU FACEBOOK, TASY HIDE, HOTEL CHENNAI

மற்ற செய்திகள்