"தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,568 ஆகவும் உயர்ந்துள்ள சூழலில், சென்னையில் நாளை மறுநாள் டாஸ்மாக் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில தளர்வுகளுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பச்சை மண்டலங்களில் மதுபானக்கடைகள் மே 7-ஆம் தேதி, சில நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தனிமனித இடைவெளி, நேர நிர்ணயம் உள்ளிட்ட பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு மே 7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மாநகரக் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான சென்னையை பொருத்தவரை நாளை மறுநாள் டாஸ்மாக் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட மற்றும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் பகுதிகளில் கொரோனா பரவல் எவ்விதம் உள்ளது குறித்த ஆய்வினை சென்னை மாநகரப் பெருநகராட்சி கணக்கிட்டு வருவதால், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுவதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொது இடங்களில்' வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 'புதிய யுக்தி'... 'டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'இந்த மருந்து கொரோனாவ கண்ட்ரோல் பண்ணுது...' '11 நாளில் சரி ஆயிடுறாங்க...' 'எனர்ஜியும் நல்லாவே கிடைக்குது...' தொற்றுநோய் தலைவர் அறிவிப்பு...!
- ''எங்களுக்கு தனி வரிசை வேண்டும்...'' 'சம உரிமையை நிலைநாட்டிய பெண்கள்...' 'காய்கறிக் கூடையுடன்' களத்தில் இறங்கிய 'மகளிர்...'
- மதுபானத்துக்கு 70% சிறப்பு 'கொரோனா' கட்டணம்... அதிரடியாக 'அறிவித்த' மாநிலம்!
- ‘2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை’... 'இந்தியாவில்'... 'மகிழ்ச்சியுடன் கூறிய 2 மாநிலங்கள்'!
- 'ஒரே ஒரு ஸ்னாக்ஸ் பாக்கெட்ட வச்சு, 2.25 லட்சம் ஆட்டைய போட்ட கும்பல்'... 'ஆன்லைனில் ஆர்டர்'... காத்திருந்த பேரதிர்ச்சி!
- 'மே மாதத்துக்கான உதவித் தொகை’... ‘இவர்களின் வங்கிக் கணக்கில் மட்டும்’... ‘ மத்திய அரசு செலுத்திய பணத்தை எடுத்துக்கொள்ளலாம்’!
- 'இந்த தேதியில இருந்து தெறக்கலாம்' அனுமதி அளித்த அரசு... என்னென்ன கட்டுப்பாடுகள்?
- சென்னை கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிக மூடல்!.. மார்க்கெட் நிர்வாகம் அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- 'கொரோனா இயற்கை கொடுத்த தண்டனை'...'வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண்'... 'திடீரென போட்ட பதிவு'... மர்மம் விலகுகிறதா?