டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை... தேர்தலையொட்டி அரசு நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது என தேர்தல் ஆணையம், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து தமிழகத்தின் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், தமிழகத்தில் ஏப்ரல் 16, 17, 18 மற்றும் மே 23 ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற 18-ஆம் தேதி, மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 10 மணிமுதல், ஏப்ரல் 18-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இதேபோல், மே மாதம் 23 ஆம் தேதியும் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக, வாக்குப்பதிவு நடக்கும் நாட்களுக்கு, 2 நாட்கள் முன்பாகவே, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் மூடப்படுகிறது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க, வாக்கு எண்ணிக்கை நாளிலும் மதுபானக் கடைகள் அடைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ மற்றும் எடுத்துச் செல்லவோ கூடாது என்று கிர்லோஷ்குமார் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் செலவுக்காக ஆதார் அட்டையை அடமானம் வைத்து வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்! விவரம் உள்ளே!
- வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்! அமைச்சர்கிட்ட மக்கள் அப்படி என்ன கேள்வி கேட்டாங்க; பிரச்சாரத்தின் போது நடந்தது என்ன?
- 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக்! தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை...
- பிரச்சாரத்தில் சோடா பாட்டில் வீச்சு... பலத்த காயமடைந்த நிர்வாகி!
- என்ன தேர்தலுக்கு தங்கத்தில் ஓட்டு இயந்திரமா? விவரம் உள்ளே!
- ஹெச்.ராஜா ஒரு அயோக்கியர்! மு.க.ஸ்டாலின் சர்ச்சைப் பேச்சு! முழு விவரம் உள்ளே!
- ‘10 வயது’.. ‘10 கிமீ’.. 25 ஆண்டு குற்றாலீஸ்வரன் சாதனை முறியடிப்பு.. சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்!
- சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை - உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
- 'நாங்க குற்றப்பரம்பரை.. நீங்க இந்தியாவையே விற்ற பரம்பரை’.. கருணாஸ் குற்றச்சாட்டு!
- ‘கட்சி கூட்டத்தில் காலி நாற்காலிகள்’.. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி!