டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்… கூடுதல் வருவாய்க்காக எடுக்கப்பட்ட திடீர் முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று காலை 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை ஏற்றப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

ரஷ்யா உடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உக்ரைன் அதிகாரி மரணம்.. இதுதான் காரணமா..? வெளியான பரபர தகவல்..!

டாஸ்மாக்:

தமிழகத்தில் மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. அப்படி விநியோகிக்கப்படும் மதுபானங்களின் விலை இன்று காலை முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளின் வருமானம்:

தமிழகத்தில் சுமார் 6000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 36000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சாதா நாட்களில் சுமார் தினசரி 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை அல்லது அரசு விடுமுறை நாட்களுக்கு முன்பான நாட்களில் தினசரி வருவாய் 100 கோடி ரூபாயைத் தாண்டியும் செல்கிறது. அரசுக்கு வருவாய் வரும் முக்கியமான துறைகளில் ஒன்றாக டாஸ்மாக் உள்ளது. கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் விடுமுறையின் போது டாஸ்மாக் வருமானம் 400 கோடியை எட்டியது குறிபிடத்தக்கது.

இன்று காலை முதல் விலையேற்றம்:

சமீபகாலமாக வருவாய் உயர்வுக்காக டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அதையடுத்து இன்று காலை முதல் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலையுயர்வின் படி குவார்ட்டருக்கு ரூ 20 விலை உயர்வும், ஹாஃப் பாட்டிலுக்கு 40 ரூபாய் விலை உயர்வும், ஃபுல் பாட்டிலுக்கு 80 ரூபாய் விலை உயர்வும் அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்சமாக விற்கப்பட்ட 120 ரூபாய் குவார்ட்டர் பாட்டிலுக்கு மட்டும் 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  அதே போல பீர் வகைகளுக்கு 10 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றம் சம்மந்தமான புது விலைப்பட்டியல் பொது மேலாளர்கள் மூலமாக அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விலையேற்றத்தின் மூலமாக அரசுக்கு கூடுதலாக 15 சதவீதம் வருவாய் கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 4300 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

விலையேற்ற எதிரொலி:

திடீரென்று மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலைக்கு அதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் என்ன விதமான எதிர்வினை வரப்போகிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே சில முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட போதும் விற்பனை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டீச்சர் அடிக்கிறாங்க என்னன்னு கேளுங்க.. போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக வந்த 3 ஆம் வகுப்பு Cute சிறுவன்..

TASMAC, TASMAC LIQUORS, PRICE, WINESHOP, BAR, LIQUOR SHOP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்