“எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே!”.. மதுரை டூ சிவகங்கை.. சிவகங்கை டூ சோழவந்தான்.. படையெடுக்கும் மதுபிரியர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மதுரை மற்றும் மதுரை நகர் பகுதியை ஒட்டியுள்ள சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் மூன்று நாட்களாக மது பிரியர்கள்  படையெடுத்துள்ளனர். இதனடிப்படையில் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த மதுரை நகர் மது பிரியர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படாத புறநகர் பகுதியான சோழவந்தான் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படை எடுத்தனர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காவல் நிலைய சரகம் தாண்டி வெளியே செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தும், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன நிலையிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சைக்கிள் மற்றும் பைக்களின் வழியாக டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து மது பிரியர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதில் தேனூர் டாஸ்மாக் கடை ஒன்றில் கட்டுக்கடங்காமல் அலைமோதிய கூட்டம் முண்டியடித்துக் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் அணியாமலும் ஆபத்தான நிலையில் மது வாங்கி சென்றுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்