'கள்ளச்சாராயம் காய்ச்ச இந்த இடம் தான் கெடச்சுதா...?' 'கடுப்பான சாராய கும்பல் நாட்டு துப்பாக்கியை எடுத்து...' பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தடையை மீறி கள்ளச்சாராயம் விற்றவர்களை கண்டித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் 144 ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாய மருத்துவ துறைகளை நிறுவனங்களை தவிர அனைத்து கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதும் மதுபானக்கடைகளும் அடக்கம். இதனை சாதகமாகவும், லாபகரமாக மாற்ற விரும்பும் நபர்கள் ஒரு சில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கின்றனர். காவல் துறையும் அவர்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல் வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் ஒரு சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். சாராயம் வாங்க அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து ஆண்கள் கூட்டமாக செல்வதால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் வாய்ப்பும் உள்ளது என புலிமேடு பகுதி கிராம மக்கள் கருதுகின்றனர்.

இதன்காரணமாக அந்த மலைப்பகுதியில் சாராயம் விற்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாராயம் காய்ச்சும் கும்பலிடம் ஏன் இங்கு சாராயம் காய்ச்சுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். அதையடுத்து இங்கு இனி சாராயம் விற்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த அந்த சாராய கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து எதிரில் உள்ளவர்களை நோக்கி சுட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இதில் அங்கிருந்த பூபாலன் (வயது 30), சங்கர் (23), அண்ணாமலை (18) ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்து, காயம் அடைந்தனர்.

காயமடைந்த மூவரையும் ஊர் மக்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதின் பெயரில் அரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, தப்பி ஓடிய சாராய கும்பலை தேடி வருகின்றனர்.

LIQUOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்