‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் சாலையோரம் உணவின்றி தவித்த முதியோர்களுக்கு தஞ்சை இளைஞர்கள் உதவி செய்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் சாலையோரம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் சிவக்குமார், சிவபாலன், சச்சின்,மணிவண்ணன் என்ற நான்கு இளைஞர்கள் வீட்டில் உணவு சமைத்து சாலையோரம் இருக்கும் மக்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அப்போது சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கிய முதியவர் ஒருவர், ‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு கண்கள் இருள ரோட்டையே பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த சின்ன வயசுல உங்களுக்கு பெரிய மனசுப்பா’ என கண் கலங்க தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

CORONA, CORONAVIRUS, TANJORE, FOOD, CURFEW, YOUTHS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்