‘தஞ்சை குடமுழுக்கு பெருவிழா’... 3 நாட்களுக்கு 'சிறப்பு' ரயில்கள்... முழுத் 'தகவல்கள்' உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பக்தா்கள் வசதிக்காக பிப்ரவரி 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 05-ம் தேதி புதன்கிழமை அன்று குடமுழுக்கு திருவிழா நடக்க இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பின்னர் நடக்கும் திருவிழா என்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 4-ம் தேதி (செவ்வாய்கிழமை) முதல் 06-ம் தேதி (வியாழன்) வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் அதன் இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

மேலும், சென்னை எழும்பூர்- தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் விரைவு வண்டியில் தற்காலிகமாக 02 முன்பதிவற்ற பெட்டிகள், பிப்ரவரி 4 (செவ்வாய்கிழமை) முதல் 06-ம் தேதி (வியாழன்) வரை ஆகிய மூன்று நாட்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறப்பு ரயில் விபரங்கள்:-

1. திருச்சி - தஞ்சை - திருச்சி சிறப்பு ரயில்:

திருச்சிராப்பள்ளி -  தஞ்சாவூர் சிறப்பு ரயில், திருச்சிராப்பள்ளியில் இருந்து நண்பகல் 12:10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1:30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 2:00 மணிக்கு புறப்பட்டு மாலை 3:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும்.

2. மயிலாடுதுறை- தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில்:

தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து காலை 09:45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (10:45) வழியாக நண்பகல் 12:00 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

மயிலாடுதுறை- தஞ்சாவூர் சிறப்பு ரயில் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3:20 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (4:07) வழியாக மாலை 5:30 மணிக்கு தஞ்சாவூர் வந்தடையும்

3. திருவாரூர்- தஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில்:

திருவாரூர்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து அதிகாலை 04:15 மணிக்கு புறப்பட்டு காலை 05:45 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

தஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து இரவு 9:55 மணிக்கு புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.

4. காரைக்கால்- தஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில்:

காரைக்கால்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் காரைக்காலில் இருந்து காலை 09:30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (11:00) வழியாக பிற்பகல் 1:00 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

தஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 2:00 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (3:30) வழியாக மாலை 5:30 மணிக்கு காரைக்கால் வந்தடையும்.

ரத்து செய்யப்படும் ரயில்கள் விபரம்:

1. 76813/ 18 காரைக்கால்- வேளாங்கண்ணி- காரைக்கால் பயணிகள் ரயில்

2. 76814/ 17 வேளாங்கண்ணி- நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி பயணிகள் ரயில்

இந்த இரண்டு ரயில்களும் பிப்ரவரி 3 முதல் 6 வரை 3 நாட்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TRAIN, TRAVELS, TANJORE, TRICHY, FESTIVAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்