"எடுத்துட்டுப்போன பொருளை எல்லாம் திரும்பி கொடுத்திடுங்கோ".. கள்ளக்குறிச்சியை சுற்றி தண்டோரா.. அதிகாரிகளின் புது முயற்சி.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டத்தின்போது தனியார் பள்ளியில் இருந்து பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் மீண்டும் அவற்றை பள்ளியிடமே ஒப்படைக்கும்படி தண்டோரா போடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கர்ப்பிணிக்கு அனுமதி மறுப்பு.?..ஹாஸ்பிட்டல் வாசலில் நடந்த பிரசவம்.. நாட்டையே அதிர வைத்த சம்பவம்..முழு விபரம்..!

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி ஜூலை 13 ஆம் தேதி மரணமடைந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் இதேபோல மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

போராட்டம்

அதைத் தொடர்ந்து பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி போராட்டத்தில் குதித்தனர் மக்கள். இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப்பகுதியில் திரண்டு ஊர்வலமாக சென்றனர். இதனிடையே கிராம மக்கள் சிலர் வகுப்பறையில் இருந்த இருக்கைகள், ஏசி, கம்யூட்டர், மின் விசிறிகள், ஏர் கூலர் விடுதி சமையலறையில் இருந்த சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அள்ளிச் சென்றனர். இதைத்தவிர, பள்ளி பின்புறம் உள்ள வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் தூக்கிச் சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

தண்டோரா

இந்நிலையில், கிராம மக்கள் சிலர் தூக்கிச் சென்ற பொருட்களை மீண்டும் பள்ளியிடமே ஒப்படைக்கும்படி தண்டோரா போடப்பட்டுள்ளது. சின்னசேலம் வருவாய் துறை அதிகாரிகளின் முயற்சியால் தனியார் பள்ளியை சுற்றியுள்ள கனியாமூர், விளங்கம்பாடி, வினைத்தீர்த்தாபுரம், இந்திலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்டோரா போடப்பட்டுள்ளது. அதில்,"பள்ளியில் இருந்து தூக்கிச்சென்ற பொருட்களை பள்ளிக்கு அருகே மீண்டும் போட்டுவிடுங்கள். இல்லையென்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே உயிரிழந்த மாணவியின் உடலை பெற பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, மாணவியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | Kallakurichi: மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்.. இன்று நடைபெறும் நல்லடக்கம்.. பரபரப்பில் கள்ளக்குறிச்சி..!

KALLAKURICHI, TANDORA, TANDORA URGES PEOPLE, கள்ளக்குறிச்சி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்