இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ளவர்களுக்கு ஆன்டிபாடி எனும் எதிர்உயிரி சோதனைகள் நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பரிந்துரைத்துள்ளது. 

2. தென்கொரியாவில் செய்யப்படுவது போல சில நிமிடங்களில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரியை எடுக்கும் நடைமுறை கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3. அத்தியாவசிய பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

4. நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை நோக்கித் எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என ஹிமாச்சல பிரதேச காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

6. நாட்டில் நிலைமை சரியாகும் வரை மாதம் மாதம் தனது ஊதியத்தில் 30% தொகையை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

7. ககன்யான் பயிற்சிக்காக ரஷ்யா சென்ற 4 இந்திய விண்வெளி வீரர்கள் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

8. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9. கொரோனா எதிரொலியால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிக்க வைகோ வலியுறுத்தல்.

10. பொது மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் தடையின்றிக் கிடைக்க தோட்டக்கலைத்துறை துறை சார்பில் காய்கறிகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடமாடும் விற்பனை நிலையம் கொண்டுவரப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

11. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதற்கான  அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்