மாண்டஸ் ஓவர்.. அடுத்து இன்னொரு புயலா?.. தமிழ்நாடு வெதர்மேன் சொல்லிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் வரும் நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழநாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே கரையை கடந்தது. சென்னை - புதுவை இடையே கரையை கடந்த 13 வது புயல் இது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்பிறகு புயல் வலுவிழந்த போதிலும், தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் பல நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கிறது.

இருப்பினும், மழையின் அளவு படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த சில நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தமிழக வேதாரமென் பிரதீப் ஜான் அடுத்த சில நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"மேற்கு தமிழகம், உள் மாவட்ட தமிழகம், டெல்டா பகுதிகள் (தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர்), திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழை மேலும் குறையும். மேலும், ஈரப்பதம் இழுத்துச் செல்லப்பட்டு, டிசம்பர் 14 முதல் அடுத்த 5 நாட்களுக்கு உயர் காற்றழுத்தம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி வரையில் வறண்ட காலநிலையே நிலவும் என தெரிவித்துள்ள பிரதீப்," அடுத்து டிசம்பர் 19ஆம் தேதி தான் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது, அடுத்து உருவாகும் காற்றழுத்தம் (டிசம்பர் 16/17க்குள்) உருவாகும். இருப்பினும் அது மாண்டஸ் போன்ற புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

TAMILNADU WEATHERMEN, TAMILNADUWEATHERMAN, CYCLONE, MANDOUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்