'தமிழ்நாடு வாழ்க'.. குடியரசு தின விழா அணிவகுப்பு.. முதலில் வந்த அலங்கரிக்கப்பட்ட வாகனம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இன்று நடைபெற்ற 74 வது குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வாகனம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

இந்தியாவின் 74 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படையினர், காவல் துறையினர் உள்ளிட்டோரியின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

Images are subject to © copyright to their respective owners.

வழக்கமாக மெரினா காந்தி சாலை பகுதியில் குடியரசு தின விழா நடைபெறும். ஆனால் இந்த முறை அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடப்பதன் காரணமாக உழைப்பாளர் சிலை அருகே விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள காலை எட்டு மணிக்கு முதல்வர் முக. ஸ்டாலினும் அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என் ரவியும் காவல்துறை மற்றும் ராணுவ அணிவகுப்புடன் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது தலைமை செயலர், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து முப்படையினர், காவல்துறை, சிறைத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பும் பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த வாகனம் முதலில் வந்தது. அதில் தமிழ்நாடு வாழ்க என்று வாசகம் இடம் பெற்றிருந்தது. இதனை அனைவரும் கண்டு ரசித்தனர். அதில் தமிழ்நாடு என்று எழுக்களுடன் கூடிய கோலமும் இடம்பெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

தமிழ்நாட்டை விட தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என் ரவி சமீபத்தில் தெரிவித்திருந்தது சர்ச்சையாகி இருந்தது. பின்னர் அவர் விளக்க அறிக்கையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

REPUBLIC DAY, RN RAVI, GOVERNOR, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்