"பெட்ரோல் போட காசு இல்லண்ணா".. போலீஸ் கிட்ட உதவி கேட்ட இளைஞர்.. அடுத்த நிமிஷமே நடந்த நிகழ்வு.. மனசை தொட்ட காவலர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2023 ஆம் ஆண்டு தற்போது தொடங்கி உள்ள நிலையில், உலக மக்கள் அனைவரும் அதனை சிறப்பாக வரவேற்று பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் இயங்கி வருகின்றனர்.
Also Read | 2023 ல கெளம்பி.. 2022-ல் விமானம் தரை இறங்கியதா?.. பயணிகளுக்கு காத்திருந்த வினோத சம்பவம்!!
கடந்த ஆண்டுகளில் கைகூடாத பல்வேறு கனவுகளை இந்த 2023 ஆம் ஆண்டில் எட்டிப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் ஏராளமானோர் செயல்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் சோஷியல் மீடியாவில் நாம் வலம் வரும் போதும் நம்மை இன்னும் பாசிட்டிவ் சிந்தனையுடன் செயல்பட வைக்கும் வகையில் நம்மை சுற்றி நடக்கும் நிறைய சம்பவங்கள் தொடர்பான செய்திகள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட விஷயங்கள் கூட அதிகம் வலம் வருவதையும் நாம் பார்த்திருப்போம்.
இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாம் கடந்து வரும் போது நிச்சயம் பாசிட்டிவ் எண்ணங்களுடன் ஒருவித தாக்கத்தை கூட மனதில் நிச்சயம் கடந்து செல்லும். அந்த வகையில் ஒரு உற்சாகத்தை உண்டு பண்ணும் வீடியோ தான், இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வண்டிமரா தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். அப்படி ஒரு சூழலில், பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார் ராமச்சந்திரன். போக்குவரத்து பணிகளை அவர் கவனித்து கொண்டிருந்த சமயத்தில், இளைஞர் ஒருவர் அவ்வழியில் பைக்கில் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, ராமச்சந்திரனிடம் தனது பைக்கில் பெட்ரோல் இல்லை எனக்கூறி ஐம்பது ரூபாயையயும் அவர் கேட்டுள்ளார்.
இளைஞரின் தேவை குறித்து அவர் கூறியதும், உடனடியாக உதவவும் முன் வந்துள்ளார் போக்குவரத்து காவலர் ராமச்சந்திரன். இதனைத் தொடர்ந்து, தன்னிடம் இருந்த 50 ரூபாயை அந்த இளைஞரிடம் ராமசந்திரன் கொடுத்துள்ளார். யார் கேட்டும் தரல சார், நீங்க தந்ததுக்கு ரொம்ப நன்றி சார் என்றும் அந்த இளைஞர் குறிப்பிடுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் சூழலில், பலரும் போக்குவரத்து காவலரின் செயலை எண்ணி நெகிழ்ந்து போய் பாராட்டியும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பசங்க கைவிட்டுட்டாங்க".. ஆதரவற்ற பாட்டிக்கு இளைஞர் செய்த உதவி.. கண்கலங்கி அவங்க சொன்ன வார்த்தை.. வீடியோ..!
- காதல் கை கூடல... விபரீத முடிவை எடுக்க நினைத்த இளம்பெண்.. அப்படியே தலைகீழான சம்பவம்!!.. பரபர பின்னணி!!
- வெளிநாட்டில்.. காருக்குள் இருந்த இந்திய இளைஞர் உடல்??.. போனில் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்!!
- விமான பயணம் செய்து இளம்பெண்ணை தேடி வந்த வாலிபர்.. நேரில் பார்த்ததும் செய்த காரியம்!! பதைபதைக்க வைத்த சம்பவம்
- "அட, இந்தாங்க சாவிய புடிங்க".. காரை போட்டோ எடுத்த இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!
- "அட, இப்படியும் ஒரு திருமண பேனரா?".. 'பெண் அழைப்பு' முதல் 'முதலிரவு' வரை.. எல்லாத்தையும் டைமோட Schedule போட்ட நண்பர்கள்!!
- “வேணாம்டா சாமி.. நாங்க இப்படியே இருந்துடுறோம்!”.. தென் கொரியாவில் அதிகரிக்கும் முரட்டு சிங்கிள்ஸ்..? இதுதான் காரணமா?
- தமிழக இளைஞருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்.. ஒரே இரவில் தலைகீழான வாழ்க்கை.. "மொத்தமா 67 கோடி ரூபாயாம்"
- உயிரை விட முயன்ற இளைஞர்.. பெண் போலீஸ் செஞ்ச விஷயம்.. உலகளவில் கவனம் ஈர்த்த நெகிழ்ச்சி சம்பவம்.!
- அண்ணனின் விபரீத முடிவு.. கதறியழுத தம்பிக்கு திடீர்னு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்..!